பானி பூரி விற்க தடை – நோய் பரவல் எதிரொலி! அரசு அதிரடி!

0
பானி பூரி விற்க தடை - நோய் பரவல் எதிரொலி! அரசு அதிரடி!
பானி பூரி விற்க தடை - நோய் பரவல் எதிரொலி! அரசு அதிரடி!
பானி பூரி விற்க தடை – நோய் பரவல் எதிரொலி! அரசு அதிரடி!

நேபாளம் நாட்டில் பானி பூரி தண்ணீரால் காலரா பரவி வருவதாக கூறி தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக நேபாள சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திக் குறிப்பு வெளியிட்டு உள்ளது.

அதிரடி தடை:

அனைத்து வயதினரும் விரும்பும் தீனி வகையாக வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பானி பூரி உள்ளது. இந்த தீனி வகை, தமிழ்நாட்டு மக்களுக்கும் பிடித்தமான உணவாக உள்ளது. தற்போது அனைத்து தெரு முனைகளிலும் பானிபூரி கடை உள்ளது. தொடக்கத்தில் நகரங்களில் மட்டுமே இருந்த பானிபூரி தற்போது கிராமங்களிலும் எளிதில் கிடைக்கிறது. மேலும் வட இந்திய உணவு என்று ஒதுக்காமல் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் பானி பூரியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேபாளம் தலைநகர் காத்மாண்டு சுற்றுவட்டார பகுதிகளில் காலரா நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

குறிப்பாக உதய்பூர் சுற்றுவட்டாரத்தில் காலரா நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 19 ஆம் தேதி ஒருவருக்கு காலரா நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 12 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரு வாரம் தடை பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பானி பூரிக்கு அசுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் காலரா நோய் பரவி உள்ளதாக தெரிவித்தனர்.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் புதிய அம்சம்!

இதனை தொடர்ந்து பானி பூரி விற்பனைக்கு ஒரு வாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உணவுப் பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் காலரா அறிகுறி ஏதேனும் தென்பட்டால், பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும். குறிப்பாக, கோடை மற்றும் மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் குறித்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் காத்மாண்டு சுற்றுவட்டாரத்தில் ஏராளமானோர் பானிபூரி கடை நடத்தி வரும் நிலையில், இந்த தடையால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வியாபாரிகளும் உணவு பிரியர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here