அரசு ஊழியர்களுக்கு நிவாரண நிதி ரூ.4000 வழங்க தடை? அரசு பதிலளிக்க உத்தரவு!

1
அரசு ஊழியர்களுக்கு நிவாரண நிதி ரூ.4000 வழங்க தடை? அரசு பதிலளிக்க உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு நிவாரண நிதி ரூ.4000 வழங்க தடை? அரசு பதிலளிக்க உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு நிவாரண நிதி ரூ.4000 வழங்க தடை? அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.4000, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இதற்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரணம்:

தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடைகள் மூலம் ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்தார். தற்போது அந்த வகையில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

அதன்படி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாவது, உணவுப்பொருள் வழங்கல் துறையின் புள்ளிவிவரங்கள் படி மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 496 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4,153 கோடியே 69 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரிசி அட்டைதாரர்களில் மத்திய மாநில அரசு அதிகாரிகள், மத்திய மாநில அரசு நிறுவனங்களான மின்சார வாரியம், பிஎஸ்என்எல், வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே, போக்குவரத்து நிறுவனங்கள், நீதித்துறையினர், ஊழியர்கள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேற்படி துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக எவ்வித குறைப்பும் இன்றி சம்பளம் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதிக்கு தடை விதித்து ஊரடங்கு காலத்தில் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீத் பானர்ஜி, நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் நிதியுதவி வழங்கும் திட்டம் பெரும்பாலும் முடிந்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து விசாரணையை அடுத்த இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Correct rules already Government employees every month salary is come but why Government extra amount given. India toomuch poor people no work so they are given amount.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!