ஆன்லைன் விளையாட்டிற்கு முழுவதுமாக தடை விதிப்பு – மாநில அரசு உத்தரவு!

1
ஆன்லைன் விளையாட்டிற்கு முழுவதுமாக தடை விதிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஆன்லைன் விளையாட்டிற்கு முழுவதுமாக தடை விதிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஆன்லைன் விளையாட்டிற்கு முழுவதுமாக தடை விதிப்பு – மாநில அரசு உத்தரவு!

சூதாட்டம், பந்தயம் அல்லது பணத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை:

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் மொபைல் போன் இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த காரணத்தால் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்தது. மாணவர்கள் தங்களது நாள் முழுவதும் ஆன்லைன் கேம் விளையாடி கழித்தனர். இதனால் மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய நடைமேடை டிக்கெட் விலை ரூ.10 ஆக குறைப்பு? தெற்கு ரயில்வே விளக்கம்!

சூதாட்டம், பந்தயம் அல்லது பணத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆன்லைன் விளையாட்டுகள் முதலியவற்றிற்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பயனர்களால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாட முடியவில்லை என்று தகவல்கள் வருகின்றன. அதனை தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளை திறக்கும் பட்சத்தில் மாநில அரசால் விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என செய்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தடை – அரசு அறிவிப்பு!

சூதாட்டம் முதலியவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழகம் மற்றும் பல்வேறு பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் கர்நாடக அரசு ஆன்லைன் சூதாட்ட மற்றும் பந்தய விளையாட்டுகளுக்கு முழு தடை விதித்ததை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் தடை விதிக்கக்கோரி கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. கர்நாடக அரசின் தடையால் ஆன்லைன் கேமிங் துறை பாதிக்கப்படும் என தொழில்துறையினர் கூறிய நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here