
இந்தியாவில் WhatsApp, Facebook உள்ளிட்ட 23 செயலிகளுக்கு தடை – அதிரடி நடவடிக்கை எடுத்த பீகார் மாநில அரசு!
பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் தற்காலிகமாக பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தடை:
தற்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயன்படுத்தி சில நபர்கள் போலியான தகவல்களை மக்களிடையே பரப்புகின்றனர். இந்த தகவல்கள் மூலம் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் போராட்டங்களும் வன்முறைகளும் நடக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது பீகார் மாநிலத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட 23 செயலிகளுக்கு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – 4% அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
Follow our Instagram for more Latest Updates
அம்மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டம் முபாரக் கிராமத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இதனால் கலவரம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் சரண் மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 11 மணி வரை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட 23 சமூக ஊடக செயலிகளுக்கு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.