தமிழகத்தில் டிச.10ம் தேதி வரை ‘இதற்கு’ தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

0
தமிழகத்தில் டிச.10ம் தேதி வரை 'இதற்கு' தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் டிச.10ம் தேதி வரை 'இதற்கு' தடை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் டிச.10ம் தேதி வரை ‘இதற்கு’ தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

கோவை மாவட்டத்தில் வரும் டிசம்பர் 10ம் தேதி வரை போராட்டங்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தடை:

தமிழகத்தில் தற்போது மக்கள் எதற்கெடுத்தலும் கூட்டம் கூட்டமாக போராட்டம் செய்ய தொடங்கிவிட்டனர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் பொது மக்கள் மக்கள் அரசியில் கட்சியினர், சமூக அமைப்பினர் போன்றோர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்படி பொது இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. சாலைகளில் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. அவசர காரணங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் போராட்டத்தால் சாலை விபத்துக்களும் ஏற்படுகிறது.

தமிழகத்தில் Security பணிக்கு ஆட்கள் தேவை – ரூ.10,000 சம்பளம்!

போராட்டங்கள் நடைபெறும் நேரங்களில் ஏற்படும் கலவரங்களால் சட்ட ஒழுங்கு தவறுகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் பல்வேறு அமைப்பினா்கள், போராட்டம், ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி, கட்சி ஊர்வலம் போன்றவைகள் நடத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த செயல்கள் கோவை மாநகரின் சட்ட ஒழுங்கை பாதிப்பதாக உள்ளது. அதனால் கோவையில் டிசம்பர் 10ம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டம், போராட்டம், தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் விதமாக நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி எந்தவொரு அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!