டிச.31 முதல் ஜனவரி 1 வரை மதுபானம் விற்பனை செய்ய தடை – நீதிமன்றம் உத்தரவு!

0
டிச.31 முதல் ஜனவரி 1 வரை மதுபானம் விற்பனை செய்ய தடை - நீதிமன்றம் உத்தரவு!
டிச.31 முதல் ஜனவரி 1 வரை மதுபானம் விற்பனை செய்ய தடை - நீதிமன்றம் உத்தரவு!
டிச.31 முதல் ஜனவரி 1 வரை மதுபானம் விற்பனை செய்ய தடை – நீதிமன்றம் உத்தரவு!

ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் டிச 31ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் யோசனை:

இந்தியாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை மற்றும் இரவு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதாக முன்னதாகவே தகவல் வந்திருந்தது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு – மாநில அரசு அறிவிப்பு! இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

ஓமைக்ரான் பாதிப்பு உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஓமைக்ரான் அறிகுறி 118 பேருக்கு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 2 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட இருவருக்கும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே சென்னையிலும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை உயர் நீதிமன்றம் புத்தாண்டு முன்னிட்டு மது விற்பனை பற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி உதவித்தொகை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

எனவே புதுச்சேரியில் மதுபான விற்பனையை வரும் டிச 31ம் தேதி நிறுத்தலாம் என்ற யோசனையை சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யும் விதமாக டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை பார்கள் திறப்பதை அனுமதி கூடாது என உத்தரவிட போவதாகவும் கருத்து கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து பற்றி சிறிது நேரத்தில் புதுச்சேரி அரசு விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here