பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், டியூசனுக்கு தடை – மன அழுத்தத்தை போக்க புதிய சட்டம்!

0
பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், டியூசனுக்கு தடை - மன அழுத்தத்தை போக்க புதிய சட்டம்!
பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், டியூசனுக்கு தடை - மன அழுத்தத்தை போக்க புதிய சட்டம்!
பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், டியூசனுக்கு தடை – மன அழுத்தத்தை போக்க புதிய சட்டம்!

சீனாவில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த சட்டத்தில் பள்ளி நேரத்திற்கு பிறகு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதிய சட்டம்:

சீனாவில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைபடுத்தப்பட்டு சிகிக்சை அளித்தனர். கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விரைவாக பரவத் தொடங்கியதால் உயிரிழப்புகளும் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சீன அரசு ஊரடங்கை அறிவித்தது. மக்கள் வெளியில் செல்ல முற்றிலும் தடை விதித்தது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு சராசரி ஆயுட்காலம் 2 ஆண்டுகள் குறைவு – சர்வதேச ஆய்வு மையம் தகவல்!

இந்த நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியது . நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து செல்போன், கணினி உள்ளிட்ட மின் சாதனங்கள் மூலம் கல்வி கற்பதால் மாணவர்கள் உடல் ரீதியாவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் அச்சமடைந்து வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்லேயே முடங்கியதால் மாணவர்கள் வெளியில் சென்று விளையாடவும் வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கூடிய வகையில் சீன அரசு புதிய சட்டம் ஒன்றை இயக்கியுள்ளது.

PhonePe மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் – பயனர்கள் அதிர்ச்சி!

அதில் பெற்றோர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும், விளையாடுதல், உடற்பயிற்சி செய்தல், படித்தல் போன்ற செயல்பாடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஈடுபட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களின் வீட்டுப் பாடங்களை குறைத்து விடுமுறை நாட்களில் முக்கிய பாடங்களுக்கு டியூசன் கற்பிப்பதை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here