EPFO அக்கவுண்ட் வைத்துள்ளவரா நீங்கள்? உங்களது பேலன்சை தெரிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களின் இருப்பு நிலை குறித்த விவரத்தை தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு வழங்கும் வட்டி மற்றும் பிற தகவலை அறியலாம்.
EPFO:
இந்தியாவில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது. இதன் மூலம் ஊழியரின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகையுடன் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்து வருகிறது. இந்த தொகை ஊழியரின் ஓய்வு காலத்தில் வழங்கப்படும். தற்போது தேவைக்கேற்ப கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதி உள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் நிறைய பேருக்கு பிஎப் தொகை பேருதவியாக இருந்தது என்று கூறினர். EPFO கடந்த நிதியாண்டு முதல் பிஎப் வட்டி விகிதத்தை 8.5% ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளுக்கு நாளை (பிப்.18) விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு!
தன் மூலம் இதனால் பிஎப் பயனர்களுக்கு எதிர்காலத்தில் அதிக தொகை கிடைக்கும். பிஎப் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் தொகையை எடுத்தால் அதற்கு வரி விதிக்கப்படும். மேலும் திட்டத்தின் முழு சலுகையையும் பெற முடியாது. வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களின் ககுறித்த விவரங்களை ஆன்லைன் மூலம், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் போன்ற வழிகள் எளிதாக தெரிந்து கொள்ளலாம். பி.எஃப் கணக்கில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் யூ.ஏ.என் எண் உள்ளது இதனை பதிவிட்டு நிதி குறித்த தகவலை தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்லைன் மூலம் பிஎப் பேலன்ஸ் செக் செய்யும் முறைகள்:
- முதலில் https://unifiedportal-mem.
epfindia.gov.in/ memberinterface என்ற இணையதளத்தில் ‘our service’ என்பதை கிளிக் செய்யவும். - “Services” மெனுவில் For Employees என்பதை தேர்வு செய்து அதில் “Member Book” ஐ தேர்வு செய்யவும்.
- அடுத்து வரும் பக்கத்தில் யூசர் நேம் யூஏஎன் எண்ணையும் பாஸ்வேர்டில் உங்கள் பாஸ்வேர்டையும் உள்ளிடவும். பிறகு உங்கள் இருப்பு நிலை தகவலை அறியலாம்.
- எஸ்எம்எஸ் பிஎப் பேலன்ஸ் செக் செய்யும் முறைகள்:
- 7738299899 என்ற எண்ணுக்கு ‘EPFOHO UAN ENG’ மெசேஜ் அனுப்புவதன் மூலம் பி.எப் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்.
- அடுத்ததாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் இ.பி.எஃப் இருப்பைக் கண்டறியலாம்.