விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இருந்து விலகிய பாலா – உண்மை நிலவரம் என்ன?

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் இருந்து விலகிய பாலா - உண்மை நிலவரம் என்ன?
விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இருந்து விலகிய பாலா – உண்மை நிலவரம் என்ன?

விஜய் டிவியில் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சென்ற வார எபிசோடில் பாலா வராமல் இருந்ததால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அதற்கான சரியான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி பாலா:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாறுபட்ட கான்செப்ட் உடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், முதல் சீசனில் நடிகை வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் இது வரை 2 சீசன்களில் கலந்து கொண்ட கோமாளிகள் மீண்டும் களமிறங்கினார்.

கடன் வாங்கியதை நினைத்து வருத்தப்படும் கதிர், வரப்போகும் அடுத்த பிரச்சனை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இனி வருபவை!

அதில் ஒருவர் தான் பாலா அவர் கலக்க போவது யாரு சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அதில் முதல் பரிசை தட்டி சென்றவர். சின்னத்திரை மட்டுமல்லாமல் ஜுங்கா, தும்பா, காக்டெய்ல், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவருடைய டைமிங் காமெடி மூலமாக சூப்பர் சிங்கர், 90ஸ் கிட்ஸ் vs 2கே கிட்ஸ், அது இது எது (சிரிச்சா போச்சு) என பல நிகழ்ச்சிகளில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் வாரந்தோறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அவர் மாறுபட்ட கெட்டப்பில் வருவதை பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சென்ற வாரம் பாலா திடீரென நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தாலும் பாலாவிற்கு என்ன ஆச்சு என கேள்வி எழுந்துள்ளது. தற்போது அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி அவர் ஷூட்டிங்கில் இருப்பதால் தான் அவரால் வரவில்லை எனவும் அடுத்த வாரம் கண்டிப்பாக வருவார் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!