பாக்கியாவிற்கு ஆதரவாக பேசிய கோபி – அதிர்ச்சியடைந்த ராதிகா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
பாக்கியாவிற்கு ஆதரவாக பேசிய கோபி - அதிர்ச்சியடைந்த ராதிகா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பாக்கியாவிற்கு ஆதரவாக பேசிய கோபி - அதிர்ச்சியடைந்த ராதிகா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
பாக்கியாவிற்கு ஆதரவாக பேசிய கோபி – அதிர்ச்சியடைந்த ராதிகா! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராதிகா கோபியிடம் பாக்கியாவை பற்றி தவறாக கூறி கத்துகிறார்கள். கோபியால் பொறுத்துக் கொள்ள முடியாமல் உன்னைவிட பாக்கியாவிற்கு நல்ல மனசு அவர் ஒருபோதும் இந்த மாதிரி செய்ய மாட்டார் எனக் கூறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறையில் இருந்து விடுதலையாகும் துர்கா, அதிர்ச்சியில் வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மயங்கியதால் பாக்கியாவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ராதிகாவையும் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து இருக்கிறார்கள். பாக்கியாவும் ராதிகாவும் காவல்நிலையத்தில் இருப்பதை அறிந்து கொண்ட கோபி நாம் மட்டும் இப்போது காவல் நிலையத்திற்கு சென்றால் அனைத்து உண்மைகளும் இருவருக்குமே தெரிந்துவிடும். இதனால் நாம் அமைதியாக வீட்டிலேயே இருந்து விடுவோம் என சொல்லி யாருடைய போனையும் அட்டென்ட் பண்ணாமல் வீட்டிலேயே இருக்கிறார். நாம் இப்படி ஒரு ஆபத்தில் சிக்கி இருக்கிறோம் ஆனால் கோபி தன்னுடைய காலை அட்டென்ட் செய்ய மாட்டேங்கிறார் என ராதிகா மிகவும் கோபத்தில் இருக்கிறார்.

அதற்கு பிறகு எழில் காவல் நிலையத்திற்கு வந்து பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என போலீசாரிடம் நிரூபித்து பாக்கியா மற்றும் ராதிகா இருவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறார். ஆனால், போலீசாரிடம் காசு கொடுத்து தான் எழில் வெளியில் பாக்கியாவை மீட்டுக் கூட்டி வருகிறார் என நினைத்துக்கொண்டார். உடனே ராதிகா கோபமாக வீட்டிற்கு சென்று வீட்டில் இருக்கும் அனைத்தையும் தூக்கி எறிகிறார். பின்பு கோபியிடம் கண்டவாறு சண்டை போடுகிறார். பின்பு ராதிகா, நான் பாக்கியாவை மிகவும் நம்பினேன். ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார் என கூறுகிறார். உடனே கோபிக்கு கோபம் வந்துவிடுகிறது. பாக்கியா ஒரு போதும் சமையல் விஷயத்தில் இந்த மாதிரி செய்ய மாட்டார் என ஒன்று கோபி கூறிவிடுகிறார். உடனே ராதிகாவிற்கு சந்தேகம் வந்துவிடுகிறது . இதற்குப் பிறகாவது கோபியை பற்றி உண்மையை தெரிந்துகொள்ள ராதிகா முற்படுவரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here