விஜய் டிவியில் முடிவுக்கு வரும் “பாக்கியலட்சுமி” சீரியல்? கடுப்பான ரசிகர்கள்!

0
விஜய் டிவியில் முடிவுக்கு வரும்
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் "பாக்கியலட்சுமி" சீரியல்? கடுப்பான ரசிகர்கள்!
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் “பாக்கியலட்சுமி” சீரியல்? கடுப்பான ரசிகர்கள்!

விஜய் டிவியில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் “பாக்கியலட்சுமி” சீரியலில் மகா சங்கமம் முடிவில் கோபி பற்றிய உண்மை எல்லாம் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் தற்போது மீண்டும் கதை ஜவ்வாக இழுக்கப்படுவதால் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்து இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் பல மொழிகளில் வெற்றி கண்ட கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடம், மராத்தி, மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் மெகா ஹிட்டான இந்த சீரியல் தற்போது தமிழ் மற்றும் ஒடிஷா மொழியில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக பாக்கியா மற்றும் கோபி கதாபாத்திரங்கள் உள்ளன.

கோபி நடந்து கொண்டதை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, கோபியை திட்டிய ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

கோபி தன்னுடைய குடும்பத்தையும், ராதிகா குடும்பத்தையும் ஏமாற்றி பல வேலைகளை செய்கிறார். அது குடும்பத்தில் கோபியின் தந்தைக்கு தெரிந்தாலும் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு பேச முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் தாத்தாவின் 75வது பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வந்துள்ளனர். மகா சங்கமத்தில் மூர்த்தி தனத்திற்கு கோபி பற்றிய எல்லா உண்மையும் தெரிந்துள்ளது. கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கி இருப்பதும் தெரிகிறது.

Exams Daily Mobile App Download

ஆனால் அதெல்லாம் தெரிந்தால் பாக்கியாவால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் சொல்லாமல் ஊருக்கு கிளம்பி விடுகின்றனர். ராதிகா வீட்டிற்கு 2 முறை சென்ற மூர்த்தி கோபி தான் பாக்கியாவின் கணவர் என்ற உண்மையை மட்டும் சொல்லாமல் இருப்பதால் இன்னும் பல மகா சங்கமம் வந்தாலும் கோபி பற்றிய உண்மை தெரிய வராது என ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இப்படி வாரந்தோறும் கோபி மாட்டிக் கொள்வது போல காட்டப்படுவதும் பின் கோபி தப்பித்து விடுவதுமாக கதை இருப்பதால் இந்த சீரியலை எப்போது முடிப்பீங்க என ரசிகர்கள் கேள்வி மேல கேள்வியாக கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!