கலர்ஸ் டிவி சீரியலில் களமிறங்கும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் – அவரே வெளியிட்ட செய்தி!

0
கலர்ஸ் டிவி சீரியலில் களமிறங்கும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் - அவரே வெளியிட்ட செய்தி!
கலர்ஸ் டிவி சீரியலில் களமிறங்கும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் - அவரே வெளியிட்ட செய்தி!
கலர்ஸ் டிவி சீரியலில் களமிறங்கும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் – அவரே வெளியிட்ட செய்தி!

தமிழ் சின்னமாவின் ஜாம்பவானாக வலம் வந்த நடிகர் பாக்கியராஜ் அவர்களின் மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ள “எங்க வீட்டு மீனாட்சி” சீரியலில் நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

எங்க வீட்டு மீனாட்சி:

சன் டிவி-யில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் விஜயலட்சுமியாகவும், ஜீ தமிழ் சீரியலான சூர்யவம்சத்தில் அன்னபூரணியாகவும் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பூர்ணிமா. இவர் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகரான பாக்கியராஜின் மனைவி. இவர் முன்னதாக பல படங்களில் நடித்துள்ள நிலையில் சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் “எங்க வீட்டு மீனாட்சி” சீரியலில் நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா முதல் ரோஜா வரை – ரசிகர்களின் கமெண்ட்கள்!

எங்க வீட்டு மீனாட்சி சீரியலின் ப்ரமோ வீடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகை பூர்ணிமா. இந்நிலையில் இந்த புதிய சீரியல் பற்றி அவர் கூறுகையில், முதல் முறையாக கலர்ஸ் தமிழ் சேனலுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றுவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்க வீட்டு மீனாட்சி சீரியல் ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தை தாங்கி வரும் மற்றும் இந்த சீரியல் ஒரு திறமை வாய்ந்த படக்குழுவினரை கொண்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால் இந்த சீரியலில் நடிப்பது எனக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. சின்னத்திரை ரசிகர்களை இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் மகிழ்விக்க முடியும், அவர்கள் எனது நடிப்பை ரசித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார். இதனிடையே “ஒரு சுவாரஸ்யமான புதிய சீரியல் விரைவில் வருகிறது. தயவு செய்து பார்த்து எங்க வீட்டு மீனாட்சியை ஆதரிக்க வேண்டும்” என்று சீரியல் டீசரை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து ரசிகர்களை கேட்டு கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!