பாக்கியலட்சுமி’ சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
பாக்கியலட்சுமி' சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி’ சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு பிரபலத்திற்கு திருமணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால், அது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். ஒரு சாமானிய பெண்ணின் ஆசைகள், கனவுகள் என்று அனைத்தையும் அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். குறிப்பாக,ஒரு பெண் தனது ஆசைகளை நிறைவேற்றும் போது அது தடைக்கற்களாக குடும்பத்தினரே இருப்பது போன்றும் இந்த சீரியலில் காட்டப்படுவது எதார்த்த நிலையினை எடுத்து காட்டுகிறது. இப்படியாக இருக்க, இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை நேஹா. இவர் இந்த சீரியலில் கடைசி மகள் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பணம் இல்லாமல் தவிக்கும் கோபி, முன்வந்து உதவி செய்யும் பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இனியா ஸ்கூல் போகாமல் தியேட்டர் சென்றது, அதனால் அவர் சந்தித்த பிரச்சனைகள் என்று காட்சிகள் அமைக்கப்பட்டது. அப்போது இவரது நடிப்பு அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது. நேஹா ஏற்கனவே பல முன்னணி சீரியல்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இதனால் இவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்பு முனையாக அந்த சீரியல் அமைந்தது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியல் – ஹீரோ இவர் தானாம்!

அதற்கு அடுத்ததாக அவருக்கு விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நேஹா தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த போடோஸில் அவர் மணப்பெண் கோலத்தில் இருக்கிறார். இதனால் பலரும் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!