விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி - ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி - ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியல் ராமமூர்த்தி இறந்து விடுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் முதலில் எந்த விதமான பரபரப்புகளும் இல்லாமல் சாதாரணமான தொடராக தான் ஒளிபரப்பாக தொடங்கியது. இதனால் ரசிகர்கள் சற்று குறைவாக தான் இருந்தனர். அதன்பிறகு குடும்பத்தலைவியான பாக்கியா சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் பார்த்த பல குடும்ப தலைவிகள் அதிகமாக பாக்கியலட்சுமி சீரியலை பார்க்க தொடங்கினார்கள். இதனால் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஆதரவு பெருகி வந்தது.

நாளடைவில் பாக்கியாவை ஏமாற்றும் கணவராக உள்ள கோபிக்கு எதிர்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது. தனது குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்ளும் கோபி மனைவி பாக்கியாவை மட்டும் வெறுக்கிறார். தனது தோழி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார். இவை அனைத்தும் தெரிந்த ஒருவர் கோபியின் அப்பா ராமமூர்த்தி. இவர் கோபியை வழிக்கு கொண்டு வர அனைத்து சொத்துக்களையும் பாக்கியா பேரில் எழுதி வைக்கிறார்.

ஒரு சமயத்தில் தாத்தாவிற்கு உடல்நலம் பாதித்து நடக்க முடியாமலும், பேச முடியாமலும் அவதி படுகிறார். இந்த சந்தர்ப்பத்தில் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த வேதனை அடைகின்றனர். ஆனால் சற்று உடல்நலம் மீண்டு வருவது போல் காட்சிகள் தொடரில் வந்தாலும், திடீரென்று ராமமூர்த்தி உயிரிழந்து விடுவது போல் காட்சிகள் வர உள்ளது. இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வர உள்ளது உறுதியாகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!