‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி? அதிர்ச்சியில் குடும்பம்! வைரலாகும் ப்ரோமோ!

0
'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி? அதிர்ச்சியில் குடும்பம்! வைரலாகும் ப்ரோமோ!
'பாக்கியலட்சுமி' சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி? அதிர்ச்சியில் குடும்பம்! வைரலாகும் ப்ரோமோ!
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் திடீரென மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி? அதிர்ச்சியில் குடும்பம்! வைரலாகும் ப்ரோமோ!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் கோபியின் அப்பா ராமமூர்த்தி திடீரென இறந்து போவதை போல வெளியான எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சில எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் கோபியின் அனைத்து ரகசியங்களையும் அறிந்திருக்கும் அப்பா ராமமூர்த்தி, கோபியின் திருமணத்தை தடுத்து நிறுத்துவரா என்று பார்த்தால் திடீரென கீழே விழுந்து அவர் படுத்த படுக்கையாகிறார். இப்போது பாக்கியாவை காப்பாற்றுவதற்கு எழில் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருக்கும் நிலையில்,கோபி – ராதிகாவின் திருமணம் பற்றிய விஷயம் இன்னும் எழிலுக்கு தெரியவில்லை.

விரைவில் நடக்க இருக்கும் கெளதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

மறுபக்கத்தில் ராதிகாவின் பேச்சை கேட்டு பாக்கியாவை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ள கோபி, அடுத்து வர இருக்கும் எபிசோடுகளில் பாக்கியாவிடம் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி விடுகிறார். இனி கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்வது மட்டும் தான் மிச்சம். இப்படி இருக்க கோபியின் ரகசிய திருமணத்தை யார் தடுத்து நிறுத்துவார், கோபி பற்றிய உண்மைகளை குடும்பத்தாருக்கு யார் சொல்லுவார் என்று ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மீதான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் நடிகை ஷபானாவின் குடும்பம் – வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில், ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி தீடீரென இறந்து போவதை போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது, படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து முடியாமல் போன ராமமூர்த்தி மரணமடைவதை போலவும், பாக்கியா எந்தவொரு ஆதரவும் இல்லாமல் தவித்து நிற்பதாகவும் சில காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம்பிடித்துள்ளது. இந்த ப்ரோமோவானது எடிட் செய்யப்பட்டதாக இருந்தாலும், ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!