மீண்டும் ராதிகாவுடன் சேர துடிக்கும் கோபி, கவலையில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து வருபவை!

0
மீண்டும் ராதிகாவுடன் சேர துடிக்கும் கோபி, கவலையில் குடும்பம் - 'பாக்கியலட்சுமி' சீரியல் அடுத்து வருபவை!
மீண்டும் ராதிகாவுடன் சேர துடிக்கும் கோபி, கவலையில் குடும்பம் - 'பாக்கியலட்சுமி' சீரியல் அடுத்து வருபவை!
மீண்டும் ராதிகாவுடன் சேர துடிக்கும் கோபி, கவலையில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் அடுத்து வருபவை!

கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது கதையில் புதிய திருப்பம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடம் பிடித்து வருகிறது. மேலும் குடும்பங்களில் நடக்க கூடிய நிகழ்வுகளை எதார்த்தமாக காட்ட கூடிய வகையில் கதைக்களம் இயக்கப்படுவதால், இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கடந்த சில நாட்களாக வெளியான எபிசோடுகளில் பாக்கியா கோபியை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறினார். இதையடுத்து கோபியும் பாக்கியவிடம், இது என்னோட வீடு, இதற்கான பணத்தை கொடுத்து விட்டு வெளியே போக சொல்லு என்று கூறியிருந்தார். இதன் பிறகு பாக்கியா நீங்க சொன்ன பணத்தை நான் ஒரு வருடத்தில் கொடுத்து விடுவேன் என்று சொல்லி சவால் விடுகிறார்.

‘ராஜா ராணி 2’ சீரியல் விட்டு விலகிய பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதையடுத்து வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவிற்கு எதிராக பேசுகின்றனர். இந்த நிலையில் எழில் மட்டும் பாக்கியாவிற்கு துணையாக நிற்கிறார். இன்னொரு பக்கம் கோபி ஹோட்டல் ரூமில் தங்கி இருக்கிறார். அப்போது எதிர்ச்சியாக கோபியை வெளியில் பார்க்கும் ராதிகா குற்ற உணர்ச்சியில் அழுகிறார். தன்னால் தான் கோபிக்கு இப்படி ஒரு நிலைமை என நினைத்து கவலைப்படுகிறார். இதனை தொடர்ந்து, கோபி வழக்கம் போல் ராதிகாவின் கையை பிடித்து கொண்டு கல்யாணம் பற்றி பேசுகிறார். ராதிகாவும் அமைதியாக நின்று அவர் சொல்வதை கேட்கிறார்.

அந்த பக்கம் ஸ்கூட்டியில் செல்லும் பாக்கியா இதனை பார்த்து விடுகிறார். மேலும் ராதிகாவுடன் கோபியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார் பாக்கியா. இதை அடுத்து நடுரோட்டில் கோபி செய்யும் காரியத்தை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா நிற்கிறார். மற்றொரு பக்கம் ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் அவரின் மனதை மாற்ற நினைக்கிறார்கள். ஒருவேளை ராதிகா மனசு மாறி கோபியை ஏற்றுக் கொள்வாரா? அப்படி ஏற்று கொண்டால் பாக்கியா என்ன செய்வார்? என்ற கேள்விகளுடன் விறுவிறுப்பாக அடுத்த வார எபிசோட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here