ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அதிர்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பத்தினர் – அடுத்து வரப்போகும் எபிசோட்!

0
ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அதிர்ச்சியில் 'பாக்கியலட்சுமி' குடும்பத்தினர் - அடுத்து வரப்போகும் எபிசோட்!
ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அதிர்ச்சியில் 'பாக்கியலட்சுமி' குடும்பத்தினர் - அடுத்து வரப்போகும் எபிசோட்!
ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி, அதிர்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பத்தினர் – அடுத்து வரப்போகும் எபிசோட்!

பாக்கியலட்சுமி சீரியலில் எப்போதும் போல கோபி அப்பா பேச்சையும் மீறி ராதிகாவை பார்க்க செல்வதால் உண்டாகும் பிரச்சனைகளை சமாளிக்க ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். இது பற்றிய எபிசோடுகள் இனி வரும் நாட்களில் வர உள்ளது.

ராதிகாவுடன் திருமணம்:

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உண்மையிலேயே பள்ளிகளில் நடந்து வரும் மாணவிகளுக்கான அநீதி குறித்த காட்சிகள் வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வது போலவும், இதனால் இனியா மிகவும் கவலையில் போலவும் காட்சிகள் வர இருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் அச்சத்தில் உள்ளார்கள். அதே நேரத்தில் பாக்கியாவிற்கு மருத்துவமனையில் இருந்து ஏதோ தன்னிடம் கோபி மறைகிறார் என்று எண்ணம் வருகிறது.

கதிர், முல்லை ஜோடிக்கு குழந்தை பிறக்காது – டாக்டர் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!

இதை நினைத்து ஒரு பக்கம் குழப்பத்தில் உள்ளார். அதே நேரத்தில் எழில் தன் காதலை அம்ரிதாவின் பெற்றோரிடம் சொல்லி விடுகிறார். இதனால் அவர்கள் எழில் மீது கோவத்தில் இருந்து வருகிறார்கள். முதலில் கோபியை வீட்டிற்கு வர கூடாது என்று சொல்லும் ராதிகாவின் அம்மா, ராதிகா அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் போது ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுகிறார். மீண்டும் கோபி வீட்டிற்கு வந்த பிறகு, உங்க அப்பா இங்க வந்து இந்த அளவு பேசுனத்துக்கு அப்புறமும், நான் ஏன் உங்கள வீட்டுக்கு வர அனுமதிக்கிறேன் தெரியுமா? என்று கேட்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா & வருண் – டபுள் எவிக்சன்! ரசிகர்கள் அதிர்ச்சி!

நீங்க உங்க குடும்பத்தை விட்டு விட்டு ராதிகாவை கல்யாணம் செஞ்சுக்குவேன் என்று சொன்னதால் தான். அதனால நீங்க உங்க கல்யாணத்துக்கு ரெடி ஆகுற வழிய பாருங்க என்று கூறுகிறார். சரி என்பது போல் அமைதியாக இருக்கிறார். இதனால் கோபி விரைவில் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை தன் பிள்ளைகளிடம் எப்படி சொல்வது என்று அமைதியாக இருக்கிறார். ஆனால் தொடர்ந்து ராதிகாவின் அம்மா அதை பற்றி பேச, ஒரு கட்டத்தில் நாம இப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். கூடிய சீக்கிரமே நான் விவாகரத்து வாங்கிருவேன் என்று ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்கிறார். இந்த விஷயத்தை அறிந்து பாக்கியா மற்றும் குடும்பத்தினர் என்ன முடிவெடுப்பார்கள் என்று பெரிய திருப்பங்கள் வர உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here