விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை தழுவும் கோபியின் அப்பா – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் மரணத்தை தழுவும் கோபியின் அப்பா - ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் மரணத்தை தழுவும் கோபியின் அப்பா - ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை தழுவும் கோபியின் அப்பா – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வாய் பேச முடியாமல் படுத்தபடுக்கையாக இருக்கும் பாக்கியாவின் மாமா ராமமூர்த்தி திடீரென இறந்து போவதை போல சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

சமீப காலமாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறது. இதுவரை ஒளித்து மறைத்து ராதிகாவுடன் பழகி வந்த கோபி தானாகவே ஒரு சிக்கலில் மாட்டி இருக்கிறார். அதாவது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் 3 வளர்ந்த பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கும் கோபி தனது பாலிய கால தோழி ராதிகாவை காதலித்து வருகிறார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் கோபி, பாக்கியாவுக்கு தெரியாமல் அவரிடம் இருந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார்.

ஆன்லைனில் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – A டூ Z விபரங்கள் இதோ!

இதற்கிடையில் கோபியின் உண்மை முகம் அத்தனையும் தெரிந்து வைத்திருக்கும் அவரது அப்பா ராமமூர்த்தி கீழே விழுந்து படுத்தபடுக்கையாகிறார். இது ஒரு புறம் இருக்க, பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து வாங்குவதற்காக அவரை கோர்ட்டுக்கு அழைத்து கொண்டு வர சொல்லி வக்கீல் சொல்கிறார். மறுபக்கத்தில் கோர்ட்டில் இருந்து விவாகரத்து சம்பந்தமாக லெட்டர் ஒன்று வருகிறது. தவிர, கோபியுடன் திருமண கனவு கண்டு கொண்டிருக்கும் ராதிகா, பாக்கியாவையும் அவரது குடும்பத்தாரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்!

இதன் மூலம் கோபி, தானாகவே ஒரு சிக்கலில் மாட்டி இருக்கிறார். இதற்கு அடுத்து, வீட்டில் உள்ளவர்களுக்கு கோபி பற்றிய உண்மை தெரிந்தால் என்னவாகும் என்று பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இந்த நிலையில் கோபியின் அப்பா ராமமூர்த்தி திடீரென இறந்து போவதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இப்போது தான் ராமமூர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரால் தான் கோபியை தடுத்து நிறுத்த முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இவ்வேளையில் இது போன்ற எடிட் செய்யப்பட்ட ப்ரோமோக்கள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here