ராதிகாவை திருமணம் செய்ய தயாராகும் கோபி? தடுத்து நிறுத்துவரா பாக்கியலட்சுமி? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

0
ராதிகாவை திருமணம் செய்ய தயாராகும் கோபி? தடுத்து நிறுத்துவரா பாக்கியலட்சுமி? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவை திருமணம் செய்ய தயாராகும் கோபி? தடுத்து நிறுத்துவரா பாக்கியலட்சுமி? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவை திருமணம் செய்ய தயாராகும் கோபி? தடுத்து நிறுத்துவரா பாக்கியலட்சுமி? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது கோபி, பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற்றிருக்கும் நிலையில் அவர் ராதிகாவை திருமணம் செய்துகொள்வது போலவும், அவரை தடுத்து நிறுத்த பாக்கியா புறப்படுவது போலவும் வெளியான ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

இன்றைய கால கட்டத்தை சேர்ந்த மக்களின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருப்பது சீரியல்கள் மட்டும் தான். ஏனென்றால் வருடத்திற்கு ஒன்று, இரண்டு என திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படத்திற்காக காத்திருப்பதை விட ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெஸ்ட் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதை விட ரசிகர்களின் எண்ண ஓட்டங்களை நன்கு கணித்துள்ள இயக்குனர்களும், அவர்களின் விருப்பதிக்கேற்ற படி, சினிமா பாணியில் ரொமான்ஸ் மற்றும் சண்டை காட்சிகளை வைத்து சீரியல்களை எடுக்க துவங்கியுள்ளனர்.

சன் டிவியின் “தெய்வமகள் 2” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் ஒட்டு மொத்த குடும்ப ஆடியன்ஸ்களையும் ஈர்க்கும் விதமாக தயாரிக்கப்பட்டு வரும் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது பல்வேறு பரபரப்பான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. இதில் குறிப்பாக, திருமணமாகி 3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி ஒளிந்து, மறைந்து தனது பாலிய கால காதலியுடன் டூயட் பாடி வருகிறார். இதில் ஸ்வாரசியம் என்னவென்றால் கோபியின் காதலி ராதிகா மற்றும் மனைவி பாக்கியா இருவரும் நல்ல தோழிகள் என்பது தான்.

இப்படி ஒவ்வொரு முறையும் ராதிகா, கோபி வீட்டுக்கு வரும் போது புகைப்படங்களை ஒளித்து வைப்பது, வீட்டை விட்டு ஓடுவது என இவர் செய்யும் அட்டகாசங்கள் வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது என்ன விவரம் என்று சொல்லாமல் பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த விஷயம் பாக்கியலட்சுமி வீட்டுக்கு தெரிய வருமா, தெரிந்தால் என்ன நடக்கும் என்ற திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

யார் இந்த ‘பாக்கியலட்சுமி’ சுசித்ரா? அவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ! ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில், ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவது போலவும், அது தனது கணவர் கோபியின் திருமணம் என்று தெரியாமல் முழு குடும்பமும் அதற்கு தயாராவது போலவும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இப்போது, கோபிக்கு ராதிகாவுடன் நடக்கப்போகும் திருமணத்தை தனது குடும்பத்தாரின் உதவியுடன் பாக்கியா நிறுத்துவாரா என்பது உள்ளிட்ட சில விறுவிறுப்பான காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம்பிடிக்க அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!