விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி!

ஆரம்பத்தில் பல விமர்சனங்களை பெற்று பார்வையாளர்களால் வெறுக்கப்பட்டவர் பாக்கியலட்சுமி சீரியல் கோபி. ஆனால் தற்போது அவரால் தான் இந்த தொடர் அதிகளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தும் அதிகளவில் சீரியல் ரசிகர்களை குவித்தும் வருகிறது. இதற்க்கு அடையாளமாய் விஜய் டெலிவிசன் அவார்டில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்த அவார்ட் எண்ணிக்கையை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் செம்ம ஹிட் அடித்து டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல் ஆக பாக்கியலட்சுமி தொடர் விளங்கி வருகிறது. இந்த கதையின் எழுத்தாளர் பெண் என்பதாலோ என்னவோ இந்த சீரியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள விஷயங்கள் அதிகம் காட்டப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் அதிகளவில் ரசிகர்கள் விரும்பி பார்த்தாலும் சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர் பல விமர்சனங்களை பெற்று வந்தது. ஏனென்றால் ஒரு பக்கம் ரசிகர்கள் ஒரு பெண் இவ்ளோ வெகுளியாவா இருப்பா? என்று பாக்கியா மீது கோவத்தையும், மறுபக்கம் காலம் போன வயதில் காதலி கேக்குதோ? என கோபி மீது கோபத்தையும் வெளிக்காட்டும் விதமாக பல விமர்சனங்கள் தொடருக்கு எழும்பியது.

“குக் வித் கோமாளி” புகழை பற்றி வந்த பொய்யான தகவல் – அவரே வெளியிட்ட எச்சரிக்கை பதிவு!

ஆனால் அதே கோவம் நாளடைவில் விருப்பமாக மாறத் தொடங்கியது. ஏனெனில் கோபி செய்யும் லீலைகள், தப்பிக்க துடிக்கும் கில்லாடி வேலைகள் என தொடர் சூடு பிடிக்க தற்போது அதிக பார்வையாளர்களை கொண்ட சீரியல் என்ற பெருமையும், அதிக ரசிகர்களை ஈர்த்த சீரியல் என்ற பெருமையும் பாக்கியலட்சுமி தொடருக்கே சேரும் என்று சொல்லும் அளவுக்கு ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்ற விஜய் டெலிவிசன் அவார்ட் நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி தொடர் ஏகப்பட்ட விருதுகளை குவித்துள்ளது.

அதாவது பாக்கியலட்சுமி சீரியல் சிறந்த சீரியல் விருதையும், இந்த சீரியல் இயக்குனர் டேவிட் சிறந்த இயக்குனர் விருதையும், பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா சிறந்த நடிகை விருதையும், ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா சிறந்த துணை நடிகை விருதையும், எழிலாக நடிக்கும் விஷால் சிறந்த துணை நடிகர் விருதையும், கோபியாக நடிக்கும் சதிஷ் சிறந்த வில்லன் விருதையும், அப்பாவாக நடிக்கும் ரோசரி சிறந்த அப்பா விருதையும் வாங்கி இந்த முறை பாக்கியலட்சுமி தொடர் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு விருதுகளை குவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், சிறந்த அப்பாவுக்கான விருது பெற்ற ரோசரியிடம் தொகுப்பாளர்கள் கோபி சிக்குவாரா உங்களிடம் அடி வாங்குவாரா என கேட்டனர். அதற்கு அவர் கோபி மற்றும் ராதிகா திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது, அப்போது குடும்பமே சேர்ந்து அவரை அடிக்கும் என கூறி சிரிக்க வைத்துள்ளார். அவர் சொன்னதை வைத்து பார்க்கும் போது கோபி விரைவில் ராதிகாவை திருமணம் முடிப்பார் என தெளிவாகியுள்ளது. வரக்கூடிய எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!