‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகும் இனியா நேஹா? வெப் தொடர் பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!

0
'பாக்கியலட்சுமி' சீரியலில் இருந்து விலகும் இனியா நேஹா? வெப் தொடர் பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!
'பாக்கியலட்சுமி' சீரியலில் இருந்து விலகும் இனியா நேஹா? வெப் தொடர் பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகும் இனியா நேஹா? வெப் தொடர் பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா தற்போது ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் நிலையில் அவர் சீரியலை விட்டு விலகி விட்டாரா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.

பாக்கியலட்சுமி நேஹா

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சில எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக கோபி மற்றும் ராதிகாவின் திருமணத்தை பற்றி தெரிந்துகொள்ளும் ராமமூர்த்தி, அடுத்து எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் திடீரென ராமமூர்த்தி படிக்கட்டில் இருந்து விழுந்து வாய் பேச முடியாமல் போவதை போல ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் காட்டப்பட்டு வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புதிய கடை பிரச்சனைக்கு ஜனார்த்தனன் காரணமா? சீரியலில் புதிய ட்விஸ்ட்!

இதற்கிடையில் அப்பாவை நினைத்து கவலை கொள்ளும் கோபி, ராதிகாவை விட்டு விலகுவாரா என்ற பரபரப்பில் தற்போதைய எபிசோடுகள் வெளியாகி வருகிறது. இத்தொடரில் பாக்கியாவின் கடைசி மகளாக இனியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா. தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த வாணி ராணி, சித்தி 2 ஆகிய முன்னணி சீரியல்களில் நடித்து வந்த நடிகை நேஹாவுக்கு ‘பாக்கியலட்சுமி’ சீரியல் முக்கிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

பாரதி பற்றிய உண்மையை சொல்லப்போகும் கண்ணம்மா – பிறந்தநாள் விழாவில் வரப்போகும் ட்விஸ்ட்!

குறிப்பாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அப்பாவின் செல்ல மகளாக, பள்ளி மாணவியாக நடித்து வரும் நேஹா ரசிகர்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் சுமார் 2 ஆண்டுகளாக பயணித்து வரும் நேஹா தற்சமயம் ‘என்னுயிரே’ என்ற வெப் தொடரில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இப்போது, வெப் தொடரில் களமிறங்கி இருக்கும் நேஹா ‘பாக்கியலட்சுமி’ இனியாவாக தொடருவரா இல்லை, அவர் சீரியலை விட்டு விலகுவாரா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!