விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி உண்மையில் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் கோபி உண்மையில் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி உண்மையில் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஸ் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் TRPயில் போட்டி போடும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் இல்லத்தரசியான பாக்கியா தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறி செல்கிறார் என்பதே கதையாக இருக்கிறது. அவரது கணவர் கோபி நல்ல அப்பாவாக இருந்தாலும் நல்ல கணவராக இருக்கவில்லை. அவர் 40 வயதில் தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை காதலிக்கிறார். அவர் கணவரை விட்டு பிரிந்து இருக்கும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி அவரை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மீனா ஹேமா யார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அழகான குடும்பத்தை விட்டு கோபி இப்படி இருப்பதால் அவருடைய அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது. 2K கிட்ஸ் பொறாமை படும் அளவிற்கு கோபி ராதிகாவின் காதல் காட்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் நிஜ வாழ்க்கையில் நடப்பது போல ரசிகர்கள் கோபியை திட்டி வருகின்றனர். இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஸ் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவர் சொந்த ஊர் சென்னை, 1990 ஆம் ஆண்டு முதல் அவர் நடித்து வருகிறார். இவரது முதல் திரைப்படம் மின்சாரப்பூவே அதன் பின் பல படங்களில் நடித்திருக்கிறார்.

தனது குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – சீரியலில் இருந்து இடைவெளி?

ராமானுஜம் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதில் குடும்பி உடன் அவருடைய கெட்டப் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. இவர் எம்.ஜி.ஆர் ராக மேக்கப் போட்டு படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படமே அவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக இருந்தது. 2000 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். சூலம், கல்யாண பரிசு2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ரங்க விலாஸ், குலதெய்வம், பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு பாக்கியலட்சுமி கோபி கதாபாத்திரம் தான் பெரிய ரீச் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!