பாக்கியாவை ஏமாற்றி விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் கோபி – ஆனாலும் சிக்கல் தான்!

0
பாக்கியாவை ஏமாற்றி விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் கோபி - ஆனாலும் சிக்கல் தான்!
பாக்கியாவை ஏமாற்றி விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் கோபி - ஆனாலும் சிக்கல் தான்!
பாக்கியாவை ஏமாற்றி விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் கோபி – ஆனாலும் சிக்கல் தான்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகர்களை நிஜமாகவே பாராட்டுவதும், திட்டுவதும் போன்ற சம்பவங்கள் நடந்து வருவது இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது சீரியலின் முக்கிய திருப்பமாக காட்சிகள் வருகின்றது.

கோபியின் திட்டம்:

பாக்கியலட்சுமி சீரியலில் தன் மனைவி பாக்கியாவை ஏமாற்றி விட்டு, காதலி ராதிகாவை திருமணம் செய்ய துடிக்கும் கோபி கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக நெகட்டிவ் கருத்துக்கள் உள்ளது. இந்த வேடத்தை மிகவும் கச்சிதமாக செய்து வரும் நடிகர் சதீஸ் பாராட்டுகளை பெற்று வருகிறார். சீரியலில் கோபி ஏதவாது செய்து மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் அவர் அடுத்து என்ன செய்வார் என்பது முதற்கொண்டு ரசிகர்களுக்கு அத்துபடியாகி விட்டது இந்த கதாபாத்திரம்.

கதிர் & முல்லையை பார்த்து வயிற்றெரிச்சலில் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

ராதிகா விவாகரத்து பெற்று விட்டதும், கோபியையும் விவாகரத்து பெற்று வர வற்புறுத்துகிறார் ராதிகாவின் அம்மா. ராதிகாவும் கோபியை பற்றி தெரியாமல் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் தான் கோபியின் அப்பாவுக்கு இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போகும் விஷயம் மயூ மூலமாக தெரியவருகிறது. இதனால் கோபியை கண்டிக்க போகிறார், ஆனால் அப்போது அவர் மாடியில் இருந்து கீழே விழுந்தால் பக்க வாதம் வந்து உடல் நிலை மிகவும் மோசமாகிறது. பேச முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்.

கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் பாரதி & வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்த சந்தர்ப்பத்தில் கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார். பாக்கியாவும் கோபி மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக என்ன என்று கூட கேட்காமல் அதில் கையெழுத்து போடுகிறார். இப்படி பட்ட சூழ்நிலையிலும் கூட கோபியின் இந்த செயல் வெறுப்படைய வைக்கிறது. ஆனாலும் கோபி சற்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அவரால் ராதிகாவின் பேச்சையும் மறுக்க முடியவில்லை . இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தாத்தா மீண்டும் மெல்ல குணமாகி வருவது போல் காட்சிகள் வருகிறது. இதனால் கோபி ராதிகாவின் திருமணத்திற்கு முன்னதாக தாத்தா மீண்டு வந்து அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here