பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
பாக்கியலட்சுமி' சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி' சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மரணத்தை சந்திக்கும் ராமமூர்த்தி – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் ராமமூர்த்தி தாத்தா, மரணமடைவது போன்ற காட்சிகள் வர இருப்பதாக ப்ரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்:

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது மிகவும் பரபரப்பாக காட்சிகள் சென்று வருகின்றது. பாக்கியாவின் கணவர் கோபி ராதிகாவை திருமணம் செய்வதற்காக பல தில்லு முள்ளு வேலைகளையும் செய்து வருகிறார். இது பற்றி அறிந்த கோபியின் அப்பா ராமமூர்த்தி கோபியை அழைத்து கண்டிக்கிறார். இனி ராதிகாவை பார்க்க கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆனால் கோபி சத்தியமும் செய்து விட்டு மீண்டும் ராதிகாவை சந்தித்து பழகி வருகிறார்.

‘குக் வித் கோமாளி’ பரத்திடம் இருந்து விலகிய செப் வெங்கடேஷ் பட் – காரணம் என்ன? ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனால் கோபமடைந்த ராமமூர்த்தி தனது அனைத்து சொத்துக்களையும் பாக்கியாவின் பேரில் எழுதி வைக்கிறார். இது கோபி உட்பட வீட்டில் உள்ள அனைவர்க்கும் அதிர்ச்சியாக உள்ளது. இதனால் இவர்களுக்கு நடுவில் ஏதோ பிரச்சனை என்பது மட்டும் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அது என்ன என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், மீண்டும் கோபி செய்யும் வேலைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் ராமமூர்த்தி அவரை கண்டிக்க வரும் போது மாடி படியில் இருந்து விழுந்து பலத்த காயம் ஏற்படுகிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனால் எழுந்து நடமாடவும், வாய் பேசவும் முடியாத நிலையில் இருக்கிறார் தாத்தா. குடும்பத்தினர் அனைவரும் தாத்தாவை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர். கோபியும் தன்னால் தான் அப்பாவிற்கு இப்படி ஆகிவிட்டது என்று சற்று வருத்தப்படுகிறார். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ராமமூர்த்தி உயிரிழந்து விடுவதாகவும், இதனால் பாக்கியா ஆதரவை இழந்து வாடுவது போலவும் காட்சிகள் வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!