கோபியின் சூழ்ச்சியால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
கோபியின் சூழ்ச்சியால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் பாக்கியா - சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபியின் சூழ்ச்சியால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் பாக்கியா - சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபியின் சூழ்ச்சியால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவுக்கு தெரியாமல் கோபி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது போல வெளியான சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம் குறித்த ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாக்கியலட்சுமி’ இல் கடந்த சில எபிசோடுகளாக எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. ஒரு பக்கம் கோபியின் அப்பா ராமமூர்த்தி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து வாய் பேசமுடியாமல் போக, அவரை பாக்கியா உட்பட மற்ற குடும்பத்தார் அனைவரும் கவனித்து வருகின்றனர். மறுபக்கத்தில் அப்பாவின் இந்த நிலைமைக்கு தான் மட்டும் காரணம் என்று கோபி எண்ணிக்கொண்டிருந்தாலும், ராதிகாவை விட்டு வருவதற்கு அவருக்கு மனமில்லை.

கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இதற்கிடையில் ராமமூர்த்தியின் மருத்துவமனை செலவு பற்றிய சில சம்பவங்களால் பாக்கியா வருத்தப்பட, அவர் பணத்திற்கு ஆசைப்படுவதாக கூறி பாக்கியாவை உதாசீனப்படுத்துகிறார் கோபி. இப்படி எல்லா விதமான ஏச்சுகளையும் வாங்கி கொண்டு பொறுமையாக இருந்து வருகிறார் அப்பாவி குடும்பத்தலைவி பாக்கியா. இப்போது, ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக பாக்கியாவிடம் இருந்து எப்படி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது என்று கோபி சிந்தித்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான காட்சிகள் இதுவரை ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இடம்பிடித்திருக்க, இதன் அடுத்த கட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதில் கோபியின் அறைக்கு வரும் பாக்கியாவிடம், ஒரு பேப்பரில் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்கிறார் கோபி. அதற்கு எந்த பேப்பர் என்று சொல்லும் பாக்கியா, எந்தவொரு உண்மையையும் அறியாமல், வேறு எவ்வித கேள்விகளும் கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.

பாரதியுடன் ஜோடி போட்ட வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!

இப்போது, அதனை வாங்கிக்கொள்ளும் கோபி இது என்ன பேப்பர் என்று கேட்காமல் கையெழுத்து போடுகிறாய் பாக்கியா என்று கேட்க, நீங்கள் தானே கேட்டீர்கள். அதனால் தான் போட்டு கொடுத்தேன் என்று கோபி மீதுள்ள தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இப்போது கோபியின் ஆசைப்படி, பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பத்திரத்தில் அவரின் கையெழுத்தை பெற்றுக்கொள்ள, அடுத்ததாக அவர் ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா, அல்லது மனம் மாறுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here