‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகும் கோபி? அதிர்ச்சியில் ரசிகர்கள்! அவரே வெளியிட்ட வீடியோ!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சதீஸ் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, சீரியலின் கதாபாத்திரத்துடன் தன்னை சம்மந்தப்படுத்தி திட்டுவதால் சீரியலில் இருந்து விலக நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்து பல ட்விஸ்ட்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை யோசித்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு விறுவிறுப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது. கோபியை ராதிகா ஏற்றுக்கொள்வாரா அல்லது கோபியே பாக்கியாவை புரிந்துகொண்டு மீண்டும் பாக்கியாவுடன் சேர்ந்து வாழ போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பியூட்டி பார்லர் வைப்பதில் சண்டை போடும் மருமகள்கள் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வருபவை!
ஆனால், தற்போது கோபியை பாக்கியா வீட்டை விட்டு துரத்தியும் கூட கொஞ்சம் கூட கவலைப்படாமல் எப்படியாவது ராதிகாவை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் தான் கோபி தீவிரமாக இருந்து வருகிறார். சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் ஒருவர் இந்த அளவுக்கு மனைவியை ஏமாற்ற கூடாது என கண்டபடி திட்டுகின்றனர். மேலும், பலரும் இது வெறும் நடிப்பு என்பதை புரிந்துகொள்ளாமல் கோபியின் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சதீஷை திட்டுகின்றனர். இதனால், மனசு கேட்காமல் சதீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, மக்கள் அனைவரும் இதுவெறும் நடிப்பு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் சீரியல் பல திருப்பங்களை சந்திக்க இருக்கிறது. கண்டிப்பாக எங்களுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பலரும் என்னை திட்டும்போதெல்லாம் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிவிடலாமா என்றெல்லாம் தோன்றியிருக்கிறது. இந்த சீரியலில் இருந்து விலகி சாதுவான கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தோன்றியிருக்கிறது என சதீஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்