எனக்கு மாடலான ஒரு அம்மா வேண்டும் – கோபியிடம் கேட்ட இனியா! பாக்கியலட்சுமியில் புதிய திருப்பம்!

0
எனக்கு மாடலான ஒரு அம்மா வேண்டும் - கோபியிடம் கேட்ட இனியா! பாக்கியலட்சுமியில் புதிய திருப்பம்!
எனக்கு மாடலான ஒரு அம்மா வேண்டும் - கோபியிடம் கேட்ட இனியா! பாக்கியலட்சுமியில் புதிய திருப்பம்!
எனக்கு மாடலான ஒரு அம்மா வேண்டும் – கோபியிடம் கேட்ட இனியா! பாக்கியலட்சுமியில் புதிய திருப்பம்!

எனக்கு மாடலான ஒரு அம்மா வேண்டும் என கோபியிடம் இனியா கேட்கிறார். உடனே கோபியும், உனக்கு வேண்டுமென்றால் நான் ஒரு மாடலான ஒரு அம்மாவை திருமணம் செய்துகொள்ளவா என கேட்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோபியை குறித்தான அனைத்து உண்மைகளையும் பாக்கியா எப்போது தெரிந்துகொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாக்கியா மற்றும் எழிலை மட்டுமே கோபிக்கு பிடிக்காது. என்ன தான் பாக்கியாவை விவாகரத்து செய்ய நினைத்தாலும் பாக்கியா, எழிலை தவிர அனைவரின் மீதும் கோபி பாசமாகவே இருப்பார்.

குழந்தையோடு குழந்தையாகவே மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!

தற்போது இனியாவை அழைத்துக்கொண்டு கோபி ஹோட்டலுக்கு செல்கிறார். அப்போது இனியா எதற்ச்சையாக எனக்கும் மாடலாக இருக்கும் அம்மா கிடைத்தால் நன்றாக இருக்கும் என கூறுகிறார். கோபிக்கு உடனே முகம் பிரகாசமாகிறது. உடனே கோபி நான் வேண்டுமென்றால் ஸ்டைலான அம்மாவை திருமணம் செய்துகொள்ளவா என கேட்கிறார். இனியாவும் சிரித்தபடி என்னை போல உங்களுக்கும் அம்மா பிடிக்காது தானே என கேட்கிறார். ஆனால் கோபி அப்படியெல்லாம் இல்லை. எனக்கு பாக்கியாவை மிகவும் பிடிக்கும் என கூறுகிறார்.

இதற்கு பிறகு நானும் உனது அம்மாவும் பிரிந்துவிட்டால் நீ யாரின் பக்கம் இருப்பாய் என கேட்கிறார். அதற்கு இனியா இதில் சந்தேகமே இல்லை. கண்டிப்பாக நான் உங்களது பக்கம் தான் நிற்பேன் என கூறுகிறார். உடனே கோபியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாக்கியாவை விவாகரத்து செய்தாலும் இனியாவிற்கு எந்த கஷ்டமும் ஏற்பட போவதில்லை. கண்டிப்பாக மகிழ்ச்சியடைவார் போல. கோபி, ராதிகாவை திருமணம் செய்த பிறகு ராதிகா தான் எனது அம்மா என்று இனியா கூற கூட வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!