பாக்கியாவிற்காக செழியனிடம் சண்டை போடும் ஜெனி, நெகிழ்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
பாக்கியாவிற்காக செழியனிடம் சண்டை போடும் ஜெனி, நெகிழ்ச்சியில் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவிற்காக செழியனிடம் சண்டை போடும் ஜெனி, நெகிழ்ச்சியில் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவிற்காக செழியனிடம் சண்டை போடும் ஜெனி, நெகிழ்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

செழியனிடம் இனியாவிற்கு ஸ்கூல் கட்ட தேவையான பணம் இருந்தும் கட்ட மறுக்கிறார். இதனால், பாக்கியாவிற்காக செழியனிடம் ஜெனி சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா மீது மொத்த குடும்பமும் கோவமாக இருக்கின்றனர். அதாவது, கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருக்கின்ற உண்மை பாக்கியாவிற்கு தெரியவந்ததும் கோபியுடன் ஒரு நிமிடம் கூட வாழ கூடாது என நினைத்து கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். பின்னர், விவாகரத்து வாங்கிய கையோடு கோபியின் துணிமணிகளை எடுத்துவந்து கொடுத்து இதற்கு பிறகு இந்த வீட்டில் உங்களுக்கு இடமில்லை என கூறுகிறார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் முடிவுக்கு வர போகிறதா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!

பின்னர், கோபி இந்த வீட்டிற்காக நான் நிறைய செலவு செய்திருக்கிறேன். எனவே, இந்த வீட்டிற்காக நான் செலவு செய்த பணத்தை கொடுக்க வேண்டும் என கோபி கேட்க பாக்கியாவும் 40 லட்சம் தருகிறேன் என ஒப்புக்கொள்கிறார். பின்னர், கோபி வீட்டை விட்டு வெளியேறியதும் ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா மூவரும் பாக்கியாவை திட்டுகின்றனர். அதாவது, அவன் ராதிகாவை சந்திப்பதற்கு நீயே ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறாய் என கூறி சரமாரியாக திட்டுகின்றனர். மேலும், இனியாவும் ஸ்கூல் பீஸ் காட்டவில்லை என சொல்லி இதுவே அப்பாவாக இருந்தால் சரியான நேரத்தில் பீஸ் கட்டியிருப்பார் என கூறுகிறார்.

இதற்கு நடுவே ஜெனி செழியனிடம் உன்னிடம் இருக்கும் பணத்தில் இனியாவிற்கு பீஸ் கட்டலாம்மல்லவா என கேட்க நான் எதற்காக கட்ட வேண்டும் அம்மா தானே இந்த குடும்பத்தின் செலவுகளை பார்த்து கொள்கிறேன் என சவால் விட்டிருக்கிறார்கள். அவர்களே கட்டட்டும் என செழியன் கூறுகிறார். பின்னர், ஜெனி செழியனிடம் இதற்காக தான் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும். அப்பொழுது தான் கணவன்மார்கள் கைவிட்டாலும் பெண்கள் சொந்தக்காலில் நிற்க முடியும் என கூறி செழியனிடம் ஜெனி சண்டைபோடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here