தாத்தா பிறந்தநாளுக்கு தனத்தை அழைத்த பாக்கியா, எழில் அமிர்தாவை நினைத்து கோவப்படும் பாட்டி – இன்றைய எபிசோட்!

0
தாத்தா பிறந்தநாளுக்கு தனத்தை அழைத்த பாக்கியா, எழில் அமிர்தாவை நினைத்து கோவப்படும் பாட்டி - இன்றைய எபிசோட்!
தாத்தா பிறந்தநாளுக்கு தனத்தை அழைத்த பாக்கியா, எழில் அமிர்தாவை நினைத்து கோவப்படும் பாட்டி - இன்றைய எபிசோட்!
தாத்தா பிறந்தநாளுக்கு தனத்தை அழைத்த பாக்கியா, எழில் அமிர்தாவை நினைத்து கோவப்படும் பாட்டி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா வீட்டிற்கு வந்து இனியா பற்றி பேச ஏன் என்னிடம் இரவு பேசாமல் இருக்கீங்க என ராதிகா கேட்கிறார். பின் ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு தனத்தை வர சொல்லி அழைக்கிறார். பின் எழில் அமிர்தாவை அழைத்துக் கொண்டு வர அது ஈஸ்வரிக்கு பிடிக்காமல் இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி எழில் அமிர்தா வீட்டிற்கு போவது எல்லாம் சரியாக இல்லை என சொல்ல பாக்கியா அவள் நல்ல பெண் என சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி நல்ல பெண் தான் ஆனால் அவளின் வயது சரி இல்லாமல் இருக்கிறது என சொல்கிறார். பின் கோபி ராதிகா வீட்டிற்கு போக அங்கே மயூராவிற்கு எக்ஸாம் நடப்பதாக கோபி பேசுகிறார். அப்போது கோபி என்னுடைய மகளுக்கும் நடக்கிறது அதான் எனக்கு தெரியும் என சொல்கிறார்.

விஜே சித்ராவின் தற்கொலை வழக்கில் இருந்து தப்பிக்க முயலும் கணவர் ஹேம்நாத்? தாயார் ஆவேசம்!

உங்க மகள் என்ன படிக்கிறாள் என ராதிகா கேட்க அவள் 11 ஆம் வகுப்பு என கோபி சொல்கிறார். டீச்சரின் மகளும் அதான் என சொல்ல நான் அந்த வீட்டை விட்டு வரும் போது என் மகளையும் அழைத்து வருவேன். அவள் நான் இல்லாமல் இருக்கமாட்டாள் என கோபி சொல்கிறார். பின் பாக்கியா குன்னக்குடியில் இருக்கும் தனத்திற்கு போன் செய்கிறார். அப்போது மாமாவின் பிறந்தநாள் விழாவிற்கு கட்டாயம் வர வேண்டும் என சொல்ல மாமாவிற்கு சில மாதங்களுக்கு முன் உடம்பு சரியில்லாமல் போனதாக சொல்கிறார். அப்போது ஈஸ்வரி வர யாரிடம் பேசுகிறாய் என கேட்கிறார்.

அப்போது குன்னக்குடி என செல்வி சொல்கிறார். அந்த நேரம் எழில் அமிர்தா மற்றும் நிலா உடன் வீட்டிற்கு வருகின்றனர். அமிர்தா வந்தது ஈஸ்வரிக்கு பிடிக்காமல் இருக்கிறது. அமிர்தா வந்ததும் தாத்தாவை சென்று பார்க்க செல்கிறார். பின் அடுப்படியில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். அப்போது செல்வி படிப்பு முடிந்ததும் இங்கே இருக்க மாட்டோம் என சொன்னாய் என்று கேட்க இங்கே இருப்பது தான் பிடித்துள்ளது. ஏதாவது வேலை பார்த்துக் கொண்டே இங்கேயே இருக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் என சொல்ல, எழிலை பார்த்துவிட்டு இங்கே எல்லாரையும் பிடித்துள்ளது என சொல்கிறார்.

அப்போது ஈஸ்வரிக்கு கோவம் வருகிறது. பின் அமிர்தா நிலாவை தேடி செல்ல ஜெனி ரூமில் நிலா இருப்பதாக சொல்கிறார். பின் எழில் அமிர்தா சிரித்து பேசிக் கொண்டிருக்க செழியன் அதை பார்த்து சங்கடப் படுகிறார். கீழே வந்து ஈஸ்வரியிடம் அவர்கள் இருவரும் பேசுவது எல்லாம் சரியாக இல்லை என செழியன் சொல்கிறார். காலையில் எழுந்தது முதல் இரவு வரை அமிர்தாவிடம் தான் எழில் பேசுகிறான் என நீங்க காதலிக்கிறீர்களா என கேட்டதற்கு இல்லை என சொல்லவில்லை என சொல்கிறார். அதை கேட்டு ஈஸ்வரிக்கு கோவம் வருகிறது.

Exams Daily Mobile App Download

அப்போது எழில் நிலாவுடன் வர நிலாவிற்கு என்னை தான் மிகவும் பிடிக்கும் என சொல்கிறார். பின் ஈஸ்வரி அந்த பெண் எங்கே என கேட்க ஜெனி உடன் இருப்பதாக சொல்கிறார். பின் அமிர்தா வந்து நாங்க கிளம்புகிறோம் என சொல்ல, பாக்கியா ஏதாவது சாப்பிட வேண்டுமா என கேட்கிறார். அதெல்லாம் வேண்டாம் என அமிர்தா சொல்ல எழில் உடன் வண்டியில் சென்றுவிடுகிறார். ஈஸ்வரி இதெல்லாம் சரியாக இல்லை பாக்கியா நீ இதை கண்டிக்க வேண்டும் என சொல்ல பாக்கியாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here