தாத்தாவின் பிறந்தநாளுக்கு திட்டமிடும் குடும்பத்தினர், பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி – இன்றைய எபிசோட்!

0
தாத்தாவின் பிறந்தநாளுக்கு திட்டமிடும் குடும்பத்தினர், பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி - இன்றைய எபிசோட்!
தாத்தாவின் பிறந்தநாளுக்கு திட்டமிடும் குடும்பத்தினர், பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி - இன்றைய எபிசோட்!
தாத்தாவின் பிறந்தநாளுக்கு திட்டமிடும் குடும்பத்தினர், பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஈஸ்வரி தாத்தாவின் 75வது பிறந்தநாளுக்கு எல்லாரும் வர வேண்டும் என திட்டமிடுகின்றனர். பின் கோபிக்கு இரவு மெசேஜ் வர அதை பார்த்து பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஈஸ்வரி குடும்பத்துடன் சேர்ந்து தாத்தாவின் 75வது பிறந்தநாள் விழாவிற்கு சப்ரைஸ் செய்கின்றனர். தாத்தாவின் சொந்தக்காரர்களிடம் சொல்லி வர சொல்லிருக்கேன் அது தாத்தாவிற்கு தெரியாது என ஈஸ்வரி சொல்ல யாரெல்லாம் வரலாம் என லிஸ்ட் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தாத்தா வர எல்லாரும் பேச்சை மாற்றுகின்றனர். பின் கோபி சாப்பிட வர ஈஸ்வரி இந்த நேரத்தில் என்ன வீட்டிற்கு வந்திருக்கிறாய் என கேட்கிறார். நான் சாப்பிட வருவதாக சொல்லி இருந்தேன் என கோபி சொல்கிறார்.

மீண்டும் வெளியே சென்று போலீசில் சிக்கிய கண்ணன், காப்பாற்ற வரும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அப்போது அப்பாவின் பிறந்தநாளுக்கு சொந்தங்களை அழைத்து சப்ரைஸ் செய்ய போகிறோம் என ஈஸ்வரி சொல்ல கோபி நல்ல விஷயம் தான் என சொல்கிறார். பின் பாக்கியா எல்லாரையும் கூப்பிட போகிறோம் என சொல்ல, உன் நண்பர்களை எல்லாம் கூப்பிடாதே என சொல்கிறார். பின் ஜெனி அங்கிள் ஏன் எந்த நிகழ்ச்சிக்கும் உங்க நண்பர்களை கூப்பிட வேண்டாம் என சொல்கிறார். அதுவும் ராதிகாவை கண்டிப்பாக கூப்பிட வேண்டாம் என சொல்கிறார்கள் என சொல்கிறார் என கேட்க பாக்கியா தெரியவில்லை என சொல்கிறார்.

பின் கோபி வீட்டு செலவிற்கு பணம் குடுக்க ஈஸ்வரி என்னிடம் கொடுத்தாலும் நான் பாக்கியாவிடம் தான் கொடுக்க போகிறேன் அதை நீ பாக்கியாவிடமே கொடுத்துவிடு என சொல்கிறார். பின் கோபி பாக்கியாவிற்கு பணம் கொடுக்கிறார். உடனே ஜெனி இதே போல நீயும் என்னிடம் பணம் கொடுக்க கற்றுக் கொள் என செழியனிடம் சொல்கிறார். தாத்தாவின் பிறந்தநாளுக்கு எதாவது பெரிய பரிசு வாங்க வேண்டும் என ஜெனி சொல்ல, ஒரு வீடு வாங்கி கொடுப்போமா என செழியன் கேட்கிறார். அதெல்லாம் வேண்டாம் என ஜெனி சொல்ல, எதாவது நகை வாங்கி கொடுக்கலாம் தாத்தாவிற்கு பிடிக்கும் என சொல்கிறார்.

அன்றைய இரவு கோபியும் பாக்கியாவும் தூங்கி கொண்டிருக்க கோபிக்கு மெசேஜ் வருகிறது. இந்த நேரத்தில் யார் இவருக்கு மெசேஜ் செய்கிறார் என பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. அப்போது பாக்கியா தூங்கிவிட்டதாக நினைத்து கோபி ராதிகாவிற்கு போன் செய்கிறார். அப்போது பாக்கியா எழுந்துவிட யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார் என கேட்கிறார். அப்போது ராதிகா போனை எடுத்து பேச போனை கொடுங்கள் நான் பேசுகிறேன் என் சொல்கிறார். உடனே கோபி போனை கட் செய்து ஆப் செய்கிறார். என்னுடைய நண்பர் வாழ்க்கை கவலையை பற்றி பேசுவார் இப்போது ஆப் செய்துவிட்டேன் என கோபி சொல்கிறார். ராதிகா என்ன ஆச்சு என தெரியாமல் இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

பின் மறுநாள் பாக்கியா அதை பற்றியே யோசித்து கொண்டிருக்க, செல்வி வந்து என்ன ஆனது என கேட்கிறார். அப்போது கோபிக்கு இரவெல்லாம் போன் வருவதாக பாக்கியா சொல்ல எனக்கு அப்பவே தெரியும், நான் சொன்னால் தான் நீ நம்பமாட்ட சார் எதாவது பெண்ணிடம் பேசுவார் போல என சொல்ல உடனே கோவப்பட்ட பாக்கியா அப்படி எல்லாம் இருக்காது என சொல்கிறார். பின் எழில் வர தாத்தாவின் பிறந்தநாளுக்கு அமிர்தாவை வர சொல்லு என சொல்கிறார். எழில் சரி என சந்தோஷமாக கிளம்ப ஈஸ்வரி எழில் அந்த பெண்ணிடம் பேசுவது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here