விவாகரத்து ஆன கையோடு பாக்கியாவை வீட்டை விட்டு துரத்திய கோபி – அடுத்து வரும் ட்விஸ்ட்!

0
விவாகரத்து ஆன கையோடு பாக்கியாவை வீட்டை விட்டு துரத்திய கோபி - அடுத்து வரும் ட்விஸ்ட்!
விவாகரத்து ஆன கையோடு பாக்கியாவை வீட்டை விட்டு துரத்திய கோபி - அடுத்து வரும் ட்விஸ்ட்!
விவாகரத்து ஆன கையோடு பாக்கியாவை வீட்டை விட்டு துரத்திய கோபி – அடுத்து வரும் ட்விஸ்ட்!

விஜய் டிவியில் வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இன்றைய எபிசோடில் கோபி, பாக்கியா இருவருக்கும் டைவர்ஸ் கிடைத்த கையோடு வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா என்ன செய்யப்போகிறார் என்பதையும், ராதிகாவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதையும் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்

கோபி எதிர்பாராத விதமாக அவருக்கு முன்னால் பாக்கியா கோர்ட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததை அடுத்து இன்றைய எபிசோடில் இருவருக்கும் டைவர்ஸ் ஆகியது. விவாகரத்து கிடைத்த கையோடு வெளியே வந்த கோபி, பாக்கியாவை வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். அதை பார்த்த எழில் கோபப்பட்டு பேச முன் விரைய, உடனே பாக்கியா எழிலை தடுக்கிறார். இதை சாக்காக வைத்து கோபியும் எப்படா நானே விவாகரத்து கேட்பேன்னு பிளான் பண்ணி இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருந்து இப்போ அத நிறைவேற்றிட்ட, கடைசியா ஒன்னு சொல்றேன் இனிமே அந்த வீட்டுக்குள்ள நீ கால் எடுத்து வைக்கணும்னு கனவுல கூட நினைச்சிக்காத என சொல்லிவிட்டு அங்கிருந்து கோபி கிளம்புகிறார்.

கோபி போனது என்னம்மா அவர் பாட்டுக்கு பேசிட்டு போறாரு. நீ இப்படி அமைதியா இருக்க என எழில் பாக்கியாவிடம் கேட்கிறான். அதற்கு அவள் ஒருத்தவங்க மேல உரிமை இருந்த மட்டும் தான் அந்த கோவமே வரும், என்னை பொறுத்த வரைக்கும் கோபி யாரோ எனக்கு என சொல்லி மாஸ் காட்டுகிறார். எழிலும் அவளை ஆச்சரியமாக பார்க்க, பாக்கியா வாடா கிளம்புவோம் என சொல்லி இருவரும் பைக்கில் கிளம்பினர். அப்போது திடீரென பாக்கியா, எழிலை பார்த்து உனக்கு எதுவும் அம்மா மேல கோபமா? என கேட்கிறாள். அதற்கு எழில் அதெல்லாம் இல்லம்மா எனக்கு உன்ன பார்த்தா ஆச்சரியமா இருக்கு என்கிறான்.

இந்தப் பக்கம் ராதிகா ஊருக்கு கிளம்புறது பற்றி பேசி கொண்டிருக்க, விவாகரத்து வாங்கிய கையோடு கோபி அவளை பார்க்க வீட்டுக்கு வருகிறார். அவள் முன்னாடி டைவர்ஸ் காப்பியை காண்பித்து, எனக்கு விவாகரத்து கிடைச்சுடுச்சு என்றார். அதை பார்த்த ராதிகா என்ன சொல்றீங்க? நீங்க டைவர்ஸ் வாங்காம சமாளிப்பீங்கன்னு நான் நினைச்சேன் என அதிர்ச்சியுடன் கேட்கிறார். எனக்கு முன்னாடியே அந்த பாக்யா கோர்ட்ல போய் நிற்குறா என பதில் சோழிய கோபி, நான் இந்த டைவர்ஸ் வாங்குனதுக்கு முக்கிய காரணமே நீதான். பாக்கியாவை பிடிக்காதுன்றதை தாண்டி நீ எனக்கு வேணும். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் என கூறுகிறார்.

இந்தப்பக்கம் ஈஸ்வரி, ராதிகா வீட்டில் போய் சண்டை போட்டு வந்ததை பற்றி கோபமாக வீட்டில் பேசி கொண்டிருக்கிறாள். அதற்கு ஜெனி, நாம இதைப்பத்தி யோசிக்குறதுக்கு பதிலா நேரா கோர்ட்டுக்கு போவோம், அங்க அங்கிள், ஆண்டியை டைவர்ஸ் வாங்க விடாம தடுப்போம் என்கிறாள். அதற்கு ஈஸ்வரி, யார் நம்ம பேச்சை கேப்பா என ஆதங்கத்தை வெளிக்காட்ட, உடனே இனியா, அப்போ இனிமே அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழவே மாட்டாங்களா? என அழுது கொண்டே கேட்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here