“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனமாக இனி “பாக்கியலட்சுமி” நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்தும் நல்ல ஒரு குடும்ப சீரியல் ஆகும். இந்த சீரியலில் தனம் கதாபாத்திரம் தான் முக்கியமாக இருக்கும் நிலையில் தனமாக நடிக்கும் நடிகை சுஜிதா மாற்றப்பட இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சினிமாவை விட சீரியல் பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். காரணம் சினிமா 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் ஆனால் சீரியல்களில் ஆண்டுகளாக கதை முடிவே இல்லாமல் போவதால் தான் தினமும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அதில் முன்னிலையில் இருக்கிறது.
விஜய் டிவி “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
இந்த சீரியலில் நடிகை சுஜிதா, ஸ்டாலின் முத்து, வெங்கட், ஹேமா, குமரன், காவ்யா, சரவண விக்ரம், சாய் காயத்ரி ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் நடக்கும் சுபகாரியங்களை, நிகழ்ச்சிகளை பற்றியே கதை இருக்கிறது. இந்நிலையில் இந்த கதையில் முக்கிய ஆணி வேராக தனம் கதாபாத்திரம் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடிக்கிறார். இந்நிலையில் அந்த சீரியலில் இருந்து சுஜிதா விலக இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கண்ணம்மாவை பாராட்டி தள்ளிய பாரதி – வெறுப்பில் வெந்து போன வெண்பா! சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதில் தனமாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா நடிக்க இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. கதையின் முக்கிய கதாபாத்திரமே மாற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஆனால் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர். TRP யில் அடுத்ததடுத்து இடங்களை பிடிக்கும் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.