சிறந்த நடிகைக்கான விருது பெற்ற “பாக்கியலட்சுமி” சுசித்ரா – மேடையில் அம்மா பற்றி பேசி உருக்கம்!

0
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற "பாக்கியலட்சுமி" சுசித்ரா - மேடையில் அம்மா பற்றி பேசி உருக்கம்!
சிறந்த நடிகைக்கான விருது பெற்ற “பாக்கியலட்சுமி” சுசித்ரா – மேடையில் அம்மா பற்றி பேசி உருக்கம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இல்லத்தரசிகளின் பிரதிபலிப்பாக பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. கன்னட நடிகையான தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழக மக்களின் மனதில் குடிகொண்டு இருக்கிறார் அவர். இந்நிலையில் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் தனது அம்மாவை பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சுசித்ரா கன்னட நடிகையாக அறிமுகமானவர். பல மொழிகளில் சீரியல்களில் அவர் நடித்து இருந்தாலும் அவருக்கு தனி அங்கீகாரத்தை பாக்கியலட்சுமி சீரியல் தான் கொடுத்தது. குடும்ப பெண்ணாக மட்டுமில்லாமல், நல்ல அம்மா, நல்ல மருமகள், நல்ல மாமியார் நல்ல மனைவி என பல பரிமாணத்தில் சீரியலில் அவர் நடித்து வருகிறார். சுசித்ரா ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

செயற்கை முறை சிகிச்சை வெற்றி பெறுமா? பயத்தில் நடுங்கும் முல்லை – சீரியலில் புதிய திருப்பம்!

இந்நிலையில் TRPயில் டாப் சீரியலாக இருக்கும் பாக்கியலட்சுமி நடிகை சுசித்ராவிற்கு தனி அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன் படி விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது வகையில் பாக்கியலட்சுமி சுசித்ரா, பாரதி கண்ணம்மா வினுஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் மக்களின் மனம் கவர்ந்த நடிகையான சுசித்ரா சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக் கொண்டார். அதை பார்த்த பலர் கைதட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ExamsDaily Mobile App Download

மேலும் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் கோபி ராதிகாவும் பாக்கியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பேசிய சுசித்ரா என்னுடைய திறமைக்கு நான் பெரிய இடத்திற்கு வருவேன் என என் அம்மா அடிக்கடி சொல்வார் ஆனால் இப்போது நான் வந்திருக்கிறேன் அதை பார்க்க அவங்க இல்லை என சொல்ல அவரால் சோகத்தை அடக்க முடியாமல் அழுகிறார். அவர் பேசியதை கேட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் கண் கலங்கினார்கள். அதன் பின் அவரை பாக்கியலட்சுமி நட்சத்திரங்கள் உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here