கோபியை நிற்க வைத்து கேள்வி கேட்கும் அப்பா, பயத்தில் உளறும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!

0
கோபியை நிற்க வைத்து கேள்வி கேட்கும் அப்பா, பயத்தில் உளறும் கோபி - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ!
கோபியை நிற்க வைத்து கேள்வி கேட்கும் அப்பா, பயத்தில் உளறும் கோபி - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ!
கோபியை நிற்க வைத்து கேள்வி கேட்கும் அப்பா, பயத்தில் உளறும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அப்பாவிடம் மாட்டிக்கொண்டது கூட தெரியாமல் அவர் கேட்கும் கேள்விக்கு வழக்கம் போல பொய் சொல்லி தப்பிக்க நினைக்கும் கோபி பயத்தில் உளறுவது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

ரசிகர்களின் பல நாள் காத்திருப்புக்கு பிறகு தற்போது தான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் குட்டு வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே கோபியின் நடவடிக்கை குறித்து எழில் அறிந்திருந்தாலும் பாக்கியாவுக்காக அந்த உண்மையை சொல்லாமல் மறைத்து வருகிறார். இப்போது அப்பாவிடம் கையும் களவுமாக மாட்டி இருக்கும் கோபிக்கு என்ன நடக்க போகிறது என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வழக்கம் போல ராதிகாவுடன் ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு திரும்பும் கோபிக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.

நிறைமாத கர்ப்பிணியாக “பாரதி கண்ணம்மா” வெண்பா செய்த ரீல்ஸ் வீடியோ – குவியும் லைக்குகள்!

அதாவது கோபியின் மீது கோபமாக இருக்கும் ராமமூர்த்தி, கோபியின் பெயரை கேட்டதும் பாக்கியா மீது எரிந்து விழுகிறார். அதனால் ராமமூர்த்திக்கு என்ன ஆயிட்டென்று எல்லாரும் யோசித்து கொண்டிருக்கின்றனர். சரியான நேரத்துக்கு கோபியும் வந்து வசமாக சிக்கி விடுகிறார். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வரும் கோபியிடம், வீட்டு வருகிற நேரமா இது என ராமமூர்த்தி கேட்க காலையில் இருந்து ராத்திரி வரை ஆபிசில் இருந்து விட்டு வருகிறேன்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சுட்டி குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா – ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரிலீஸ்!

என் வேலையோட ஸ்ரெஸ் பத்தி தெரியுமா உங்களுக்கு, வராத பேமண்ட் எல்லாம் சரி பார்த்து விட்டு வீட்டுக்கு வருகிறேன் பதில் கூறுகிறார் கோபி. அதற்கு, புளுகுறான் பாரு புழுகினி பய, ராஸ்கல் என ராமமூர்த்தி மனதுக்கு நினைத்து கொள்கின்றவாறு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள், கோபி புழுகினி பையா, உண்மை தெரியாம பய உளறுறான் பாரு, வசமாக சிக்கினாய் கோபி என்று கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!