கோபி, ராதிகா திருமணத்திற்கு குடும்பத்துடன் செல்லும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பாக்கியாவை பிரிய முடிவு செய்துள்ள நிலையில் கோபி ராதிகா திருமண வைபோகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியான பாக்கியாவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை பற்றி கதை இருக்கிறது. அவரது கணவர் கோபி அழகான குடும்பத்தை விட்டுவிட்டு தனது கல்லூரி காதலியை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்து பல பொய்களை சொல்கிறார். தனது மகனிற்கு திருமணம் முடிந்துள்ளது என தெரிந்தும் கூட தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அந்த விஷயம் அனைத்தும் கோபியின் தந்தைக்கு தெரியவர ஆனால் அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது.
நடிகர் அஜித்தின் “வலிமை” படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம்!
அதனால் அவரால் பேச முடியவில்லை, அப்பாவின் மருத்துவ செலவிற்கு கூட கோபி கணக்கு பார்க்க செலவுகளை சமாளிக்க முடியாமல் பாக்கியா கடினமாக உழைக்கிறார். ஆனால் அதை எல்லாம் புரிந்து கொள்ளாத கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். ராதிகாவுடன் கோபி வக்கீலை சந்திக்க போக அவர் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வர சொல்கிறார். கோபி பாக்கியாவின் அறியாமையை பயன்படுத்தி அந்த நோட்டீஸில் கையெழுத்து வாங்குகிறார்.
சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் கோபி ராதிகாவின் திருமண வைபோகம் எந்த தடையும் இல்லாமல் நடக்க இருக்கிறது. அதில் ராதிகா பாக்கியாவை குடும்பத்துடன் வர சொல்லி அழைக்க தனது கணவரை தான் ராதிகா திருமணம் செய்ய போகிறார் என தெரியாமல் பாக்கியாவின் குடும்பம் கிளம்பி செல்கிறது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனால் அது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் ரசிகர்கள் அதிகாரபூர்வ ப்ரோமோவிற்கு எதிர்பார்த்து இருக்கின்றனர்.