மருந்து வாங்க பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியாவுக்கு உதவும் எழில் – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!

0
மருந்து வாங்க பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியாவுக்கு உதவும் எழில் - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ ரிலீஸ்!
மருந்து வாங்க பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியாவுக்கு உதவும் எழில் - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோ ரிலீஸ்!
மருந்து வாங்க பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியாவுக்கு உதவும் எழில் – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராமமூர்த்திக்கு மருந்து வாங்க போதிய பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியாவுக்கு, சமையல் ஆர்டரில் எழில் உதவுவது போல வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சிக்குளாக்கி இருக்கிறது.

பாக்கியலட்சுமி ப்ரோமோ

சமீப காலமாக பல்வேறு செண்டிமென்ட் ஆன கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மக்களிடம் இருந்து மிகுந்த வரவேற்புகளை பெற்று வருகிறது. அதாவது, எத்தனையோ சீரியல்களில் அம்மா – மகள், கணவன் – மனைவி, காதலன் – காதலி போன்ற பல்வேறு உறவுகளின் அன்பையும், பாசத்தையும் நாம் கண்டிருப்போம். ஆனால் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இந்த உறவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மாமா – மருமகள், அம்மா – மகன் ஆகியோருக்கு இடையே இருக்கும் பாச போராட்டங்களை கருவாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் வசதியான வீட்டிற்கு மருமகளாக இருந்தாலும், கணவன் மற்றும் மற்ற குடும்பத்தாரால் ஒதுக்கப்படும் பாக்கியாவுக்கு ஒரே ஆறுதலாக இருப்பது மகன் எழில் மட்டும் தான். அதே போல கணவர் கோபியின் அப்பா ராமமூர்த்தியும் பாக்கியாவுக்கு பக்க பலமாக இருக்கிறார். இப்போது சில எதிர்பாராத சம்பவங்களால் பாக்கியாவின் மாமா ராமமூர்த்தி கீழே விழுந்து வாய் பேச முடியாமல் போக அவரை ஒரு மகள் ஸ்தானத்தில் இருந்து பாக்கியா கவனித்து கொள்கிறார்.

இது தொடர்பாக ஒளிபரப்பப்படும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது. அதே போல, தாத்தாவின் மருத்துவ செலவுக்கு பணம் கொடுக்க செழியன் தயங்கும் வேளையில், கிடைக்கும் கொஞ்சம் பணத்தையும் அம்மாவின் செலவுக்காக எழில் கொடுப்பது போன்று ஒளிபரப்பான எபிசோடுகள் பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை உண்டு பண்ணி இருந்தது. இப்படிப்பட்ட பாசப்போராட்டங்களுடன் நகர்ந்து வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

அதில், ராமமூர்த்திக்கு மருந்து வாங்க மெடிக்கலுக்கு செல்லும் பாக்கியா, போதிய அளவு பணம் இல்லாமல் பணத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மருந்தை வாங்கி செல்வதாக சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். வரும் வழியில் கோபியிடம் பணம் கேட்போமா என்று சிந்திக்கும் போது, ராமமூர்த்தி தனது சொத்தை பாக்கியாவுக்கு எழுதி வைத்துள்ளதாகவும், அவரது பணத்தை பாக்கியா திட்டமிட்டு பறிப்பதாகவும் கோபி பேசியது பாக்கியாவுக்கு நினைவுக்கு வருகிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கிய புது நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

அதனால் கோபியிடம் பணம் கேட்கும் முடிவை கைவிடும் பாக்கியா, மருந்து வாங்குவதற்காக சமையல் ஆர்டர் எடுத்து அதை இரவு, பகலாக செய்து கொண்டிருக்கிறார். இப்படி, பாக்கியா சமைத்து கொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு எழுந்து வரும் எழில், மருந்து வாங்க பணம் இல்லாமல் இத்தனையும் நீ செய்கிறாயா என்று சொல்லி விட்டு அவருக்கு சமையலில் உதவுவது போல நெகிழ்ச்சியான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!