விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ இனியா நேஹாவுக்கு திருமணம்? இன்ஸ்டா புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' இனியா நேஹாவுக்கு திருமணம்? இன்ஸ்டா புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' இனியா நேஹாவுக்கு திருமணம்? இன்ஸ்டா புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ இனியா நேஹாவுக்கு திருமணம்? இன்ஸ்டா புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியாவாக நடித்து வரும் நடிகை நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை கட்டி வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் இவருக்கு திருமணம் ஆகப்போகிறதா என்று சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை நேஹா

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ‘பாக்கியலட்சுமி’ தொடரில் இனியாவாக நடித்து வருபவர் நடிகை நேஹா. ஏற்கனவே சன் டிவியின் ‘வாணி ராணி’, ‘சித்தி 2’ போன்ற மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள் மூலம் பிரபலமாக இருந்து வரும் நடிகை நேஹா தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஸ்கூல் படிக்கும் பெண்ணாக, வீட்டின் கடைக்குட்டி வாரிசாக இனியா என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

பாக்கியாவிடம் வசமாக சிக்கும் கோபி, அடுத்தகட்ட முடிவு என்ன? சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

சமீபத்தில் கூட ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நேஹாவின் நடிப்பில் வெளியான பாலியல் சீண்டல்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் பரபரப்பாக பேசப்படக்கூடியதாக அமைந்திருந்தது. இதற்கிடையில் மற்ற சீரியல் நடிகர், நடிகைகளை போலவே எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை நேஹா அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள், லைவ் உரையாடல்கள் என பலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரியவில்லை – இயக்குனர் கஸ்தூரி ராஜா ஓபன் டாக்!

அந்த வகையில் சமீபத்தில் கூட பட்டு தாவணியில் கிராமத்து பெண்ணாக இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து மீண்டுமாக பட்டு சேலை கட்டி இருக்கும் ஒரு புகைப்படத்தை நடிகை நேஹா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நடிகை நேஹாவுக்கு நிஜத்தில் திருமணம் ஆகப்போகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படம் வெறும் போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!