“பாக்கியலட்சுமி” படப்பிடிப்பில் இனியா நேஹா மேனன் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

0
"பாக்கியலட்சுமி" படப்பிடிப்பில் இனியா நேஹா மேனன் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ!
“பாக்கியலட்சுமி” படப்பிடிப்பில் இனியா நேஹா மேனன் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா மேனன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் TRPயில் போட்டி போடும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் இல்லத்தரசியான பாக்கியா தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறி செல்கிறார் என்பதே கதையாக இருக்கிறது. அவரது கணவர் கோபி நல்ல அப்பாவாக இருந்தாலும் நல்ல கணவராக இருக்கவில்லை. அவர் 40 வயதில் தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை மீண்டும் காதலிக்கிறார். அவர் கணவரை விட்டு பிரிந்து இருக்கும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி அவர் இருக்கிறார்.

‘மாஸ்டர்’ பட விஜய் ஆக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – ரசிகர்களின் வாழ்த்து!

இந்நிலையில் கோபியின் அப்பாவிற்கு இது பற்றி தெரிய அவர் இனிமேல் ராதிகா வீட்டிற்கு போக கூடாது என சத்தியம் வாங்குகிறார். ஆனால் அதையும் மீறி ராதிகா வீட்டிற்கு போன கோபி, ராதிகா தான் முக்கியம் அவளுக்காக என் குடும்பத்தை விட்டு வருவேன் என சொல்கிறார். இதை ராதிகா அம்மா ஏற்றுக் கொள்கிறார். மறுபக்கம் பாக்கியா தனது தொழிலில் பல வெற்றிகளை பார்க்கிறார். அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கும் அளவிற்கு பிரபலமாக இருக்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சௌந்தர்யா வீட்டிற்கு சென்ற வடிவுக்கரசி!

இதனால் கதைக்களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பாக்கியாவின் கடைசி மகளாக இனியா கதாபாத்திரத்தில் நேகா மேனன் நடித்து வருகிறார். அவர் அதில் பள்ளி மாணவியாக நடித்து வரும் நிலையில், நிஜத்தில் அவர் கல்லூரி படித்து கொண்டிருக்கிறார். படப்பிடிப்பிற்கு இடையே அவர் தேர்வுக்கு படிப்பது போல வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here