‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகா சங்கமத்துடன் இணையும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மகா சங்கமத்துடன் இணையும் 'பாக்கியலட்சுமி' சீரியல் - உற்சாகத்தில் ரசிகர்கள்!!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மகா சங்கமத்துடன் இணையும் 'பாக்கியலட்சுமி' சீரியல் - உற்சாகத்தில் ரசிகர்கள்!!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகா சங்கமத்துடன் இணையும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ & ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்களின் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. தற்போது இதில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகா சங்கமம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில், தற்போது மகா சங்கமம் நடைபெற்று வருகின்றது. ‘தமிழும் சரஸ்வதியும்’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இரு சீரியல்களின் மகா சங்கமம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் தமிழை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஒரு சிக்கலில் இருந்து காப்பாற்றி விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழின் அம்மா கோதை அவர்களை தங்களது வீட்டிலேயே தங்க வைத்து விடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் தமிழின் குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

டாக்டர் பட நடிகையுடன் இணைந்த ‘கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் – வைரலாகும் வீடியோ!

தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் காதலிப்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தெரிந்து கொள்கின்றனர். இதனால் அவர்களை சேர்த்து வைக்கும் நோக்கத்தில் அது குறித்து கோதையிடம் பேசவும் செய்கின்றனர். ஆனால், கோதையோ தனது மகனுக்கு நன்றாக படித்த பெண்ணை தான் தேடுவதாக திட்டவட்டமாக கூறி விடுகிறார். இதனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் கவலையில் இருக்கும் போது அவர்கள் இருவரையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சமாதானம் செய்கிறது. இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் இந்த மகா சங்கமம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கும் கண்ணம்மா, அடியாட்களுடன் சண்டையிடும் அகில் – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

இது ஒரு புறம் இருக்க, தற்போது இது குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், இந்த மகா சங்கமத்தில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சீரியல் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஏற்கனவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டும் மகா சங்கமமாக ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!