தனது கணவனின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய ‘பாக்கியலட்சுமி’ ஜெனிபர் – ரசிகர்கள் வாழ்த்து!

0
தனது கணவனின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய 'பாக்கியலட்சுமி' ஜெனிபர் - ரசிகர்கள் வாழ்த்து!
தனது கணவனின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய 'பாக்கியலட்சுமி' ஜெனிபர் - ரசிகர்கள் வாழ்த்து!
தனது கணவனின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய ‘பாக்கியலட்சுமி’ ஜெனிபர் – ரசிகர்கள் வாழ்த்து!

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபர் தனது கணவனின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுவது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது தான் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அதாவது, ராதிகாவிற்கு தற்போது தான் கோபியின் மீது சந்தேகம் வர துவங்கியிருக்கிறது. கோபி ஏதோ தவறு செய்கிறார் என நினைக்கிறார். ராதிகா, கோபி மற்றும் பாக்கியா ஆகிய மூன்று கதாபாத்திரங்கள் தான் பாக்கியலட்சுமி தொடரில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிபர் தான் நடித்து கொண்டிருந்தார்.

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கோபி யார் தெரியுமா? லீக்கான சுவாரசிய தகவல்கள்!

ஜெனிபர் கர்ப்பமாக இருந்ததன் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். ஏன் திடீரென சீரியலில் இருந்து விலக வேண்டும் என ரசிகர்கள் குழம்பி தவித்து வந்தனர். பின்பு, ஜெனிபர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ராதிகா கதாப்பாத்திரம் மிகவும் அமைதியான கதாபாத்திரம் என்று கூறியதால் மட்டுமே ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டேன். பின்பு, கதையை வேறுவிதமாக கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டனர். ராதிகா கதாப்பாத்திரம் வில்லியாக மாற இருப்பதால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறேன் என கூறினார்.

Exams Daily Mobile App Download

பின்பு தான் ஜெனிபர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். ஜெனிபருக்கு கடந்த நவம்பர் மாதத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. ரசிகர்களும் ஜெனிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அவ்வப்போது தனது மகனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டபடி இருந்தார். தற்போது ஜெனிபர் தனது கணவரின் பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜெனிபர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!