விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா யார் தெரியுமா? – வியப்பில் ரசிகர்கள்!

0
விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியல் இனியா யார் தெரியுமா? - வியப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியல் இனியா யார் தெரியுமா? - வியப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா யார் தெரியுமா? – வியப்பில் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை நேஹா மேனன் பற்றி ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து உள்ளனர்.

நடிகை நேஹா மேனன்:

சீரியல்கள் என்பது தமிழக மக்களின் முக்கிய பொழுதுபோக்கு பட்டியலில் முன்னணியில் உள்ளது. சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தினமும் ரசிகர்களை சந்திப்பதால் அவர்களுக்கு ரசிகர்களிடம் இருந்து பேராதரவும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகை நேஹா மேனன் பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கிறோம். கடந்த வார நிலவரப்படி விஜய் டிவியின் ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் நிஜ பெயர் தான் நேஹா மேனன்.

“செம்பருத்தி” சீரியல் ஷபானா, ஆர்யன் விவாகரத்து – முதல்முறையாக விளக்கிய நடிகை! ரசிகர்கள் நிம்மதி!

நேஹா கேரள மாநிலத்தில் சாலக்குடியில் 2002 பிப்ரவரி 6ம் தேதி பிறந்துள்ளார். அப்பாவின் பெயர் பிரசன்னா ராஜேஷ். தற்போது வயது 19. முதன் முதலில் சன் டிவியில் பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நிலா கதாபாத்திரமாக அறிமுகம் ஆனார். மீண்டும் சன் டிவியில் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் சீரியலில் செல்லி அம்மனாக நடித்துள்ளார். மூன்றாவதாக பெரிய சீரியலான வாணி ராணி தொடரில் தேனு என்ற வேடத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – குவியும் வாழ்த்துக்கள்!

அதன் பிறகு ஜீ தமிழ் சீரியலில் நிறம் மாறாத பூக்கள் சீரியலிலும், சன் டிவியின் தமிழ்செல்வி சீரியலிலும் நடித்து அதிக பிரபலமடைந்தார். அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் நடித்துள்ளார். முதலில் ஆர்யாவின் யட்சன் படம் மூலமும், ஜாக்சன் துரை, நாரதன் போன்ற படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சன்டிவியில் சித்தி 2 சீரியல் செவந்தியாகவும், பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாகவும் நடித்துள்ளார். இந்த சிறிய வயதில் இவரின் திறமையை வெளிப்படுத்த கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் நேஹா நல்ல முறையில் பயன்படுத்தி நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்து உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!