விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? வியக்க வைக்கும் திரைப்பயணம்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? வியக்க வைக்கும் திரைப்பயணம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? வியக்க வைக்கும் திரைப்பயணம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? வியக்க வைக்கும் திரைப்பயணம்! ரசிகர்கள் ஷாக்!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், இவரை பற்றிய தகவல்கள் ரசிகர்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லன், வில்லி என்று அனைத்து சீரியல்களிலும் வருவது போல் கதாபாத்திரங்கள் இல்லை. மாறாக குடும்பத்தை மறந்து, தன் சுயநலத்திற்காக பல செயல்களை செய்யும் பாக்கியாவின் கணவர் கோபி தான் வில்லனாக பார்க்கப்படுகிறார். இவர் மிகவும் எதிர்மறை பிரபலத்தை இந்த சீரியல் மூலமாக அடைந்து வருகிறார். அந்த அளவிற்கு கதாபாத்திரத்தை ஒன்றி நடித்து வருகிறார். இவர் இது போன்று பல குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் டிவியின் புதிய சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ப்ரோமோ ரிலீஸ்!

நடிகர் சதீஸ் 1979 ம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். சென்னை தான் இவரது சொந்த ஊர். இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்புகளை சேனியிலேயே முடித்துள்ளார். அதன்பிறகு நடிக்க தொடங்கியுள்ளார். சினிமா, சீரியல்கள், மாடலிங், விளம்பர படங்கள் என்று பலவற்றிலும் பணியாற்றியுள்ளார். மின்சாரப்பூவே என்ற திரைப்படத்தில் 1999ம் ஆண்டு சதீஷ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியுள்ளார். அதன்பிறகு பல படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கோலாகலமாக நடந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையின் வளைகாப்பு வைபோகம் – ப்ரோமோ ரிலீஸ்!

குறிப்பாக ராமானுஜரின் வாழ்கை வரலாறு படத்தில் மிக சிறப்பாக ஒரு வேடத்தில் நடித்திருப்பார். தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றில் எம்ஜிஆர் ஆக நடித்துள்ளார். 2000ம் ஆண்டு சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார். மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாணபரிசு, மகராணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இது போல மிகவும் பிரபலமான விளம்பரங்களிலும் சதீஷ் நடித்துள்ளார். இந்த தகவல்களை அறிந்த ரசிகர்கள் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here