விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் முழு விவரங்களும் சமூகவலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது தான் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி தொடர்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. பல நாட்களாகவே பாக்கியாவிடம் மாட்டுவது போல வந்து கோபி தனது சாமர்த்தியத்தால் தப்பித்து கொண்டே இருக்கிறார். எப்போது தான் கோபி பாக்கியாவிடம் வசமாக சிக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் என்பவரால் மட்டுமே பாக்கியலட்சுமி தொடர் முழுக்க முழுக்க ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஷூட்டிங்க் ஸ்பாட்டில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா செய்த காரியம் – கடுப்பான இயக்குனர்!

சமீபத்தில் நடத்தப்பட்ட விஜய் அவார்ட்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சியிலும் சிறந்த வில்லன் என்கிற விருது கோபிக்கு தான் கிடைத்தது. தற்போது கோபி குறித்தான பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே சதீஷ் பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் மின்சார பூவே என்கிற திரைப்படத்தின் மூலமாக தான் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த அனைத்து திரைப்படமுமே சதீஷ்க்கு நல்ல ரீச்சை கொடுத்திருக்கிறது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாணப்பரிசு, மகாராணி போன்ற ஏகப்பட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த சீரியல்களை தொடர்ந்துதான் சதீஷ்க்கு பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து கோபி கதாபாத்திரத்தில் தற்போது தூள் கிளப்பி கொண்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!