செழியனுக்கு வீடு வாங்கி தருவதாக கூறும் ஜெனியின் அம்மா – கோபத்தில் கோபியின் குடும்பம்!

0
செழியனுக்கு வீடு வாங்கி தருவதாக கூறும் ஜெனியின் அம்மா - கோபத்தில் கோபியின் குடும்பம்!
செழியனுக்கு வீடு வாங்கி தருவதாக கூறும் ஜெனியின் அம்மா - கோபத்தில் கோபியின் குடும்பம்!
செழியனுக்கு வீடு வாங்கி தருவதாக கூறும் ஜெனியின் அம்மா – கோபத்தில் கோபியின் குடும்பம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று செழியன் தனியாக வீடு வாங்க இருப்பதாக ஜெனியின் அம்மா வீட்டினர் முன்பு கூறி விடுகிறார். இதனால் கோபத்துடன் கோபி எழுந்து சென்று விடுகிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாக்கியலட்சுமி”. இந்த சீரியலில் இன்று ராதிகாவின் பால் காய்ச்சு விழாவிற்கு கோபி வெகு நேரம் கழித்து செல்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ராதிகா அவரிடம் சண்டை இடுகிறார். அப்போது கோபியும் எதிர்த்து கத்த மயூரி அவரை திட்டி விடுகிறார். இதனால் கோபி தனது வீட்டிற்கு வருத்தத்துடன் சென்று விடுகிறார். பின், கோபி தனது குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி கொண்டு இருக்கிறார். அப்போது ஜெனியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் வருகின்றனர்.

தமிழக அரசு கல்லூரிகளில் 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்? கோரிக்கை!

அவர்கள் இருவரும் செழியன் புது பிளாட் வாங்க இருப்பதாக கூறுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றது. கூடுதலாக, செழியன் தங்களிடம் உதவி கேட்டதாகவும் கூறுகின்றனர். இதனை கேட்டதும் கோபி கோபமாக அந்த இடத்தினை விட்டு எழுந்து சென்று விடுகிறார். இந்த விஷயத்தால் செழியன் ஜெனியின் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஜெனியின் பெற்றோர் சென்றதும், ஜெனி செழியனை சமாதானம் செய்ய தங்களது அறைக்கு செல்கிறார். அங்கு செழியன் மிகவும் கோபத்துடன் இருக்கிறார். தான் இன்னும் பிளாட் வாங்க பணம் தரவில்லை என்று கூறுகிறார். ஜெனி அவரை சமாதானம் செய்ய முயலுகிறார். ஆனால், செழியன் ஜெனியின் மேல் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். அவரை நன்றாக திட்டி விடுகிறார். அவரை வெளியே போய் விடுமாறும் கூறி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here