கோபியை வெறுக்கும் மயூரி, பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பாராட்டும் கோபி – இன்றைய எபிசோட்!

0
கோபியை வெறுக்கும் மயூரி, பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பாராட்டும் கோபி - இன்றைய எபிசோட்!
கோபியை வெறுக்கும் மயூரி, பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பாராட்டும் கோபி - இன்றைய எபிசோட்!கோபியை வெறுக்கும் மயூரி, பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பாராட்டும் கோபி - இன்றைய எபிசோட்!
கோபியை வெறுக்கும் மயூரி, பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பாராட்டும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா வண்டி ஓட்டும் விஷயம் அறிந்து கோபி அவரை பாராட்டுகிறார். கோபியை வெறுக்கும் மயூரி அவரை வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறி விடுகிறார்.

“பாக்கியலட்சுமி” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று மயூரிக்கு என்று கோபி பல பரிசுப்பொருட்களை வாங்கி செல்கிறார். மயூரிக்கு கோபியை பார்த்ததும், ராஜேஷ் சொன்னது நினைவிற்கு வருகிறது. ராஜேஷ் தனக்கு கோபி வீட்டிற்கு வருவது பிடிக்காததால் தான் சண்டை போட்டதாகவும், ஆனால், ராதிகாவிற்கு கோபியை தான் பிடிக்கும் என்று கூறுகிறார். இதனால் மயூரி குழப்பம் அடைந்து கோபி கொடுத்த பரிசுகளை வாங்கிக் கொள்ள மறுத்து விடுகிறார். இதனால் கோபி மற்றும் ராதிகா இருவரும் குழம்புகின்றனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்கறிகளின் விலை – கொரோனா எதிரொலி!

பின், ராதிகா தனியாக சென்று விசாரிக்கவும் தனக்கு கோபியை பிடிக்கவில்லை என்றும் அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல சொல்லும் படி கூறுகிறார். இதனை கேட்டு விடும் கோபி மிகவும் மனம் உடைந்து போகிறார். ராதிகாவிற்கு மயூரியின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைகிறது. பின், வீட்டில் அனைவரும் பாக்கியா தங்களிடம் சொல்லாமல் டிரைவிங் கிளாஸ் சென்ற விஷயத்தினை கோபியிடம் கூறுகின்றனர். இதனால் கோபி கோபம் அடைவார் என்று நினைத்திருக்க, கோபி பாக்கியாவை பாராட்டுகிறார்.

TN Job “FB  Group” Join Now

பின், பாக்கியா தனியாக கோபியிடம் மன்னிப்பு கேட்கிறார். அதனை பெரிதுபடுத்தாமல் கோபி சென்று விடுகிறார். ராதிகாவிடம் பேசும் மயூரி தனக்கு கோபி வீட்டிற்கு வருவது பிடிக்கவில்லை என்று கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்து விடும் ராதிகா, தனக்கு கோபி சிறு வயதில் இருந்து நண்பர் என்பதால் தனக்கு பிடிக்கும் என்று கூறுகிறார். அப்போது தன்னை பிடிக்காதா? என்று மயூரி கேட்கிறார். அதற்கு ராதிகா தனக்கு அனைவரையும் விட மயூரியை தான் பிடிக்கும் என்று கூறுகிறார். இதனால் மயூரி மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here