கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

0
கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபர் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மீண்டும் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய நடிகை ஜெனிபர், தான் கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீரியலில் பாதியில் விலகி விட்டார். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை ஜெனிபர்:

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் அனைவரும் தற்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து விட்டனர். இந்த சீரியல் சாதாரண கதையாக தான் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நாளடைவில் சர்ச்சைகளை ஏற்படுத்தவும் தொடங்கியது. திருமணம் முடிந்து தனக்கு திருமண வயதில் 3 பிள்ளைகளை கொண்ட கோபி என்கிற பாக்கியாவின் கணவர் தனது சிறு வயது காதலி ராதிகாவுடன் பழகி வருவது தான் கதையின் முக்கிய கரு போல் கொண்டு செல்லப்படுகின்றது. இது சமூகத்திற்கு மோசமான எடுத்துக்காட்டாக விளங்க கூடும் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பாரதியுடன் ஜோடி போட்ட வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!

ஆனால் இது போன்ற செயல்களின் விளைவுகளை மக்களுக்கு எடுத்துக் காட்ட தான் அது போன்ற காட்சிகள் வருவதாக சீரியல் தரப்பினர் தெரிவித்து வந்தனர். ஜிபியின் காதலியாக முதலில் திரைப்பட நடிகை ஜெனிபர் தான் நடித்து வந்தார். இவர் பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஒரு சில பாடல்களுக்கும் நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் சின்னத்திரையில் இவரின் என்ட்ரி குறித்து பலரும் ஆச்சர்யமடைந்தனர். ஆனால் இந்த சீரியலில் நடித்த ராதிகா கதாபாத்திரம் மூலம் அவர் அதிக பிரபலமடைந்தார்.

மீண்டும் சர்ச்சையில் ‘குக் வித் கோமாளி 3’ – சுனிதாவை அழவைத்த ராகுல் தாத்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜெனிபர் தனது இரண்டாவது குழந்தையை கர்ப்பமானார். இதனால் பாதியில் சீரியலில் இருந்து விலகி விட்டார். சமீபத்தில் தான் இவருக்கு 2வது ஆண் குழந்தை பிறந்தது. நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. நடிகை ஜெனிபர் தனது கணவருடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தான் குழந்தை பெற்றெடுத்த ஜெனிபர் மீண்டும் பழையபடி மாறியுள்ளதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!