விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ராதிகாவின் கர்ப்பகால புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிபர். அவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய பேபி பம்ப் காட்டி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் குடும்பத்தில் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் படும் கஷ்டங்களை பற்றி நிஜ வாழ்க்கை போல காட்டும் பாக்கியலட்சுமி தொடரிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியா ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என நினைத்து குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் பல கஷ்டங்களை சந்திக்கிறார். அவர் நல்ல அம்மாவாக மட்டுமல்லாமல், நல்ல மாமியார், நல்ல மருமகள், நல்ல மனைவியாக வலம் வருகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவுடன் பிரியாணி சாப்பிட சென்ற கண்ணன் – வெளியான வீடியோ!
அவரை புரிந்து கொள்ளாத அவர் கணவர் கோபி, அவரது காலேஜ் கால காதலி ராதிகாவுடன் நட்பாக இருக்கிறார். மேலும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார். இதெல்லாம் தெரியாமல் பாக்கியா அப்பாவியாக இருக்கிறார். முதலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிபர் தான் நடித்து வந்தார். அதன் மூலம் புகழின் உச்சில் இருந்த அவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக பிக்பாஸ் புகழ் ரேஷ்மா நடித்து வருகிறார்.
Bigg Boss Tamil Season 5 Today – Promo 1 | கணவர் இறப்பு குறித்து சொன்ன பாவ்னி ரெட்டி!
இந்நிலையில் ஜெனிபர் தான் கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என தனது யூடுப் சேனலில் தெரிவித்தார். இது இவருக்கு இரண்டாவது குழந்தை முதலில் இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதை தொடர்ந்து தற்போது தனது பேபி பம்ப் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.