பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு பிறந்த ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு பிறந்த ஆண் குழந்தை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு பிறந்த ஆண் குழந்தை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு பிறந்த ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவர் குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

நடிகை ஜெனிபர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியின் கதையாக உள்ளது. நிஜ வாழ்க்கையில் பெண்கள் சந்திக்கும் நிகழ்வுகள் பாக்கியலட்சுமி சீரியலில் கட்டப்பட்டு வருகிறது.இப்படி ஒரு மாமியார் அம்மா வேண்டும் என சொல்லும் அளவிற்கு சீரியலின் நடிகை பாக்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் மகன் எழில் அவர் தன் அம்மாவிற்கு செய்யும் உதவிகளும், அவரது வேலைக்கு உறுதுணையாக இருப்பதும் தற்போது உள்ள இளைஞர்களுக்கு பாடமாக உள்ளது. இந்த சீரியலில் கோபியின் முன்னாள் காதலியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிபர் நடித்து வந்தார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஹீரோ அருண் யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!

இவர் முதன் முதலாக எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் முத்தம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஜெனிபர் சன் டிவியில் ஒளிபரப்பான குஷ்புவின் லட்சுமி ஸ்டோர்ஸ் தொடரில் கமலா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு 2007 இல் திருமணம் நடைபெற்றது. இவருக்கு முதலாவதாக ஒரு ஆண் குழந்தை உள்ளது. அடுத்ததாக இரண்டாவது கர்ப்பமானார். அதனால் அவர் சீரியலில் இருந்து விலகினார்.

‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் 4 பைனலிஸ்ட் இவர்கள் தான்? இணையத்தில் கசிந்த தகவல்!

தான் கர்ப்பமாக இருப்பதாலும் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது என அவர் காரணம் தெரிவித்தார். ஜெனிபர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிறகு அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஜெனிபர் குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here