விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு ஏற்பட்ட சோகம் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபிக்கு ஏற்பட்ட சோகம் - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபிக்கு ஏற்பட்ட சோகம் - திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு ஏற்பட்ட சோகம் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வரும் கோபியாகிய சதீஸ் தனது நடிப்பால் அதிகளவு ரசிகர்களை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நான் எங்க போனாலும், என்ன பண்ணாலும் என்னை ஏன் திட்டுறீங்க?’ என்று உருக்கமாக பேசி பதிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் சதீஷ்:

விஜய் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளை மையமாக கொண்டு ஆரம்பமாகிய பாக்கியலட்சுமி தொடர் சமீப காலமாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை கைப்பற்றி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் வரும் கோபி தான் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை சிரிக்கவும், வியக்கவும் வைத்துள்ளார். அந்த அளவுக்கு மனைவியிடம் ஒரு முகம், காதலியிடம் மறு முகம் என நவரச நாயகனாக ரசிகர்களை ஈர்த்துள்ளார். அதாவது ஒரே வரியில சொல்லனும்னா சீரியல் பெயர் தான் பாக்கியலட்சுமி, ஆனால் மொத்த கதையும் கோபியை சுற்றி தான் நடக்கிறது.

மழையில் வழுக்கி விழுந்த பிரபல சீரியல் நடிகை – நடிப்பா? உண்மையா? குழப்பத்தில் ரசிகர்கள்!

தொடர் ஆரம்பமாகிய நாள் முதல் இந்த சீரியலை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் கோபியை தான் திட்டி தீர்க்கின்றனர். இப்போது பலரும் ஆதரித்து வந்தாலும், இன்னும் சிலர் வதக்கி தான் எடுக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் சதீஷ்குமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இதற்கு முன்பு ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்து இருந்தேன். அதில் கண்டபடி திட்டி மெசேஜ் வந்ததால், அதை டெலிட் செய்து விட்டு புதிய கணக்கு தொடங்கினேன். தற்போது இதிலும் மனம் கஷ்டப்படுத்துற மாதிரி திட்டுறாங்க.

Exams Daily Mobile App Download

ஒரு நடிகனா, ஒரு சாதாரண மனுஷனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல. நல்லா நடிச்சாலும் தப்பு, நல்லா நடிக்கலனாலும் தப்புனா நான் என்னதான் பண்ணனும்னு எனக்கு புரியல. என் நடிப்பை மட்டும் தான் இந்த சீரியல்ல வெளிப்படுத்துறேன். கோபி கதாபாத்திரம் ஒரு கதை தான் அது ரியல் இல்லை, ஆனால் எல்லாரும் ரொம்ப கடுமையா பேசுறீங்க. சத்தியமா இந்த வாழ்க்கை பற்றி ஒன்னும் புரியல. ஏதோ கொடுத்த வேலையை ஒழுங்கா செய்கிறேன் என்ற மனதிருப்தி மட்டும் எனக்கு இருக்கு என்று மனவேதனையுடன் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து உங்கள் கதாபாத்திரத்தில் அழகாக நடிக்கிறீர்கள் என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!