‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 300 எபிசோடு வெற்றி கொண்டாட்டம் – விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

0
'பாக்கியலட்சுமி' சீரியலின் 300 எபிசோடு வெற்றி கொண்டாட்டம் - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!
'பாக்கியலட்சுமி' சீரியலின் 300 எபிசோடு வெற்றி கொண்டாட்டம் - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!
‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 300 எபிசோடு வெற்றி கொண்டாட்டம் – விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான ‘பாக்கியலட்சுமி’ தற்போது 300 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சீரியலின் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 10) ஒளிபரப்பாக இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

தெரிந்த கதைகளை வித்தியாசமான கதைக்களத்துடன், மக்கள் விரும்பும் விதத்தில் கொடுப்பது தான் விஜய் டிவியின் ஸ்பெஷல். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் கதைகள் எல்லாம் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டதே. ஆனால் அதை அனைத்து மக்களுக்கும் புரியும் விதத்தில் காதல், அன்பு, பாசம், சண்டை, கோபம் போன்ற நவரசங்களுடனும் இணைத்து தருவதில் தான் விஜய் டிவி சீரியல்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா – இந்த வார TRP ரேட்டிங்!

அந்த வகையில் அம்மா பாசத்தை கருவாக வைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இந்த சீரியலின் கதைக்களம், காலம் காலமாக குடும்பத்துக்காக உழைக்கும் ஒவ்வொரு அம்மாக்களையும் பிரதிபலிக்கிறது. இதிலிருந்து சற்றே வேறுபாடும் ‘பாக்கியலட்சுமி’ யில் வரும் அம்மா புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து, தனக்கு வரும் அனைத்தையும் முயற்சித்து குடும்பத்தின் ஆதரவை பெற விரும்புகிறார்.

ஆனால் வழக்கம் போல மட்டம் தட்டப்படும் அம்மா பாக்கியலட்சுமி, அதனை மீண்டு வந்து வெற்றி பெறுவது தான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் வெற்றியாகும். இந்த சீரியல் மக்களின் பேராதரவை பெற்று கிட்டத்தட்ட 318 எபிசோடுகளை கடந்து இன்று வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றியை கொண்டாடும் விதத்தில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

வலிமை அப்டேட் – நடிகர் அஜித் உடன் ரஷ்ய ஸ்டண்ட் இயக்குநர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!!

அதில் கூட்டு குடும்பமாக வாழும் ரசிகர் ஒருவரின் குடும்பமும், பாக்கியலட்சுமி அம்மாவை போல, சாதிக்க நினைத்து ஆட்டோ ஒட்டி உழைக்கும் பெண்ணும் கலந்து கொண்டு சேரியலுக்கான தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சுசித்ரா, விஷால், ஆர்யன், திவ்யா, நேஹா, ரித்திகா, ரேஷ்மா உள்ளிட்ட பாக்கியலட்சுமி சீரியலின் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி 300’ ஆவது வெற்றி விழா விஜய் டிவியில் நாளை (செப்டம்பர் 10) மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!